
posted 11th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
அயலகத் தமிழர் தின விழா
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மூன்றாம் ஆண்டாக 'தமிழ் வெல்லும்' என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழாவை சென்னையில் நடத்தவுள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்றும் (ஜனவரி 11) மற்றும் நாளையும் இரு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவழியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதில் தொடக்க விழா சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களும் பங்கு கொள்கின்றனர்.
இருவரையும் சென்னை விமான நிலையத்தில் வைத்து தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் சிறப்பு வரவேற்று கௌரவம் அளித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)