posted 17th December 2025
இந்தப் பகுதி சீரியல் றிவூ and analysis ஆனது 15ஆம் திகதி 16ஆம் திகதி வரையிலான சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
- சிந்துவைக் கூப்பிட்ட றாதா சித்தி தனக்கு எட்டாத உயரத்திலுள்ள போத்தல்களைத் துடைக்கும்படி மிகவும் இறுக்கமாகச் சொன்னதினால், மிகவும் nervous உடன் அவள் துடைக்கையிலே ஒரு போத்தல் கீழே விழுந்ததினால் உடைந்து விட்டது.
- போத்தல் உடைந்ததும் நன்மையென்றுதான் இங்கு கூறக் கூடியதாக இருக்கின்றது. காரணம், காவேரிக்கு, சிந்துவிடம் இருந்து அவர்களின் உண்மையான வீட்டின் நிலமையானது அறியக் கூடியதாக இருந்தது.
- இதனால், காவேரியும், விஜேயும் கிறிஷ்ணாவின் உண்மையான உள்ளார்ந்தங்களை பகிர்ந்து கொண்டனர்.
- நர்மதாவோ கிறிஷ்ணாவை தன்னுடன் பூப்பந்து விளையாடும்படி வற்புறுத்தினாள். அவனும் மிகவும் அன்புடனும், மரியாதையுடனும் நர்மதாவுடன் நடந்து கொண்டான். நர்மதாவிற்கு ஏற்பட்ட கால் சுழுக்கிற்கு அவன் உழுக்கெடுத்தான்.
- பிழையாக கிறிஷ்ணாவை விளங்கிய விஜய். ஊதிப் பெரிதாக்கினான் அன்பு. கலவரத்தினை உண்டாக்கினான் அன்பு, இரு குடும்பங்களுக்கும்.
- வில்லங்கமான, கொடூர மனமுள்ள அன்பின் சொல்லை நம்பி கிறிஷ்ணாவைப் பழி முடித்து கலையாடிய சாரதா. ஆத்திரக் காரருக்கு ஏதோ மத்திமம் என்பது இங்கு நன்கு புலனாகின்றது.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 15 - 16.12.2025
முத்துமலரின் குடும்பம் எவ்வளவோ மரியாதையாக வாழ்ந்து கொண்டிருப்பது இன்று தெரிகின்றது. என்னதான் நடந்தது என்றுகூட சிந்திக்காமல், உன்னிப்பாகக் கவனிக்காமல் விஜய், கிறிஷ்ணாவை விரட்டி அனுப்பி, அவனை மனதினில் இரத்தக் கசிவை ஏற்படுத்தி விட்டான் விஜய்.
இதன் கனாகனத்தினை, அதன் பார தூரமான விளைவுகளை விளங்காத சாரதா ஒன்றுமே சிந்திக்காமல் முத்துமலரின் குடும்பத்தின் மேல் கோபம் கொண்டதுமல்லாமல், மரியாதையீனப் படுத்தினா. இதற்குப் பெயர் கோபம் இல்லை. ஆனால், இவ்வளவு கொடூரங்களைச் செய்த அன்பின் சொல்லினைக் கேட்டு ஆட்டம் ஒன்றினை ஆடினா சாரதா பாருங்க, இது மன்னிக்கவே முடியாததொன்றாகும். இந்தக் கதையின் உண்மை நிலையினை பின்பு அறிந்து கொண்டால் சாரதா என்னதான் செய்வா? கொட்டின சொற்களை பொறுக்கி எடுக்கலாமா? ஆனால், ஒன்று அதன் பின்பு, சாரதா ஒன்றுமே நடக்காத பச்சாத்தாப முகத்தோடு மன்னிச்சுக் கொள்ளுங்கள் என்றும் கேட்பா. இது சாரதாவின் நடிப்பு என்று கூறலாம்தானே! இவ்வளவு வயசான ஒரு மனிசி, ஒன்றையுமே சிந்திக்காமல் வாயினை விடலாமா?
சாரதாதான் கத்தி அட்டகாசம் பண்ணுகின்றா என்றில்லாமல், கங்கா கொஞ்சம் கவனமாக இதனை அணுகி இருக்கலாம்தானே! பாட்டி எவ்வளவோ சொல்ல சாரதா நடந்து கொண்ட விதம் பிழையாக இருப்பதாகத் தெரிகின்றது. சாரதா ஒரு தாய் என்ற றீதியில் கோபப் படலாம். என்றாலும், இது சாரதாவின் பக்கம் பிழையாகத் தோன்றுகின்றது. உண்மையான நிலையினை நர்மதாவிடம் தனிமையில் கேட்பதனை விட்டு விட்டு, இப்படி எல்லார் முன்னாலும் அதட்டிக் கேட்பது பிழையென்று நினைக்கத் தோன்றுகின்றது. அன்பரசு கேட்ட கேள்விகளானது பிழையாக இருக்கின்றதென்று அங்கு இருந்த ஒருவரும் வாய் திறக்கவேயில்லை.
முத்துமலரின் குடும்பம் சந்தானத்தின் இரண்டாவது குடும்பம். அவர்களும் சந்தானத்தினால்தான் கஷ்டப்படுகின்றார்கள். ஆனால், அவர்கள் எப்பவும் இங்கு உள்ள பெண்களுடன் வித்தியாசமாகக் கதைத்திருக்கின்றார்களா? இல்லையே! இப்படியிருக்கையில் அன்பரசின் சொல்லினை தாத்தாவே நம்பவில்லை, ஆனால், சாரதா நம்பினதுதான் பிழை என்று தோன்றுகின்றது.
சிந்துவை றாதா சித்தி திட்டியதைக் கண்டதும், முத்துமலர் சிந்துவை எல்லார் முன்னாலும் அடித்ததை கண்டு வியப்பில் ஆழ்ந்தாள் காவேரி.
விக்கி விக்கி அழுது கொண்டிருந்த சிந்துவை அணைத்தாள் காவேரி. அன்பாகக் கதைத்தாள். காவேரியின் அன்பினைப் பார்த்த சிந்து மேலும் மேலும் அழுதாள். தனது கதையினை, தன் குடும்பத்தின் நிலைமையினை விளக்கமாகச் சொன்னாள் சிந்து. அட இவ்வளவு கனமான வாழ்கையிலா இவர்கள் இங்கு வந்து நிற்கின்றார்கள் என்று மனமுருகினாள் காவேரி. ஒரு பெண்ணுக்கு கல்யாணம் நடக்க இருக்கையிலே, பெண் வீட்டார் கடன்காரர் என்றதும் காலை வாரி விட்ட மாப்பிள்ளை வீட்டார். இது எவ்வளவு கொடுமை. சிந்துவின் கல்யாணம் கானலாகிற்று.
போத்தல்களைத் துடைக்கும்படி றாதா சித்தி அன்பாகச் சொல்லி இருக்கலாம். ஆனால், அவ சொன்ன விதத்தில் சிந்துவிற்கு மனதினுள் பயமே வந்து விட்டது. இதனால் சிந்து பலமிழந்தாள். போத்தலும் தவறியது. கீழே விழுந்து உடைந்தது.
ஏழ்மை எப்படியெல்லாம் ஒருவரின் மனதினை பெலவீனமாக்கும் என்பது இங்கு விளக்கமாகத் தெரிகின்றது. ஆனால், இந்த வலியானது தகப்பனின் வீட்டிலே புருஷனுடன் இருந்து குப்பை கொட்டும் றாதா கதைக்கக் கூடாது. தகப்பன், விஜேயின் தாத்தா, அன்பரசையும், றாதாவையும் வீட்டை விட்டு கலைத்தபோது சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருக்கையில் காவேரிதானே சாப்பாடு போட்டு பசியினைத் தீர்த்தாள். அதெல்லாம் றாதா மறந்து விட்டாவா? வேலை ஒன்றும் செய்யாமல் பொம்பிள்ளையின் வீட்டில் இருந்து குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் அன்பரசுக்கு இந்த கேவலாமான புத்தி வராமலா? அடங்கி இருக்கக் கூடாதா?
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!