posted 17th December 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- மீனா ஒரு ஜடம் இல்லை என்ற அவவுக்குப் பெருமை தேடிக் கொடுத்த தமிழ்.
- தமிழின் மேல் மாறாத கோபம் சிபீ்க்கு இருக்கிறது என்று தனது சொந்த அத்தையிடமே சொன்ன சிபீ. தமிழின் தாய் வருந்துவா என்றும் உணர்ந்து கொள்ளும் சிபீ.
- மாப்பிள்ளையை மறுவிருந்திற்கு அழைக்க வந்த தமிழின் அம்மாவாக உள்ள ஹசீனாவும், தேனுவும், அமுதாவாலும், கணேஷனினாலும் மரியாதையீனப்படுத்தப்பட்டு, வெளியில் தள்ளிவிடப்பட்டார்கள்.
- கீர்த்தி, தமிழின் நண்பி, புதிதாக பிரகாஷிற்கு நியமிக்கப்பட்ட டாக்டர் முதன் முதலாக பிரகாஷைப் பாரக்க வந்த போது கேள்விக்கு மேல் கேள்விகளைக் கேட்ட கணேஷன்.
- சம்பாஷினையினை இடைநிறுத்தி கீர்த்தியை பிரகாஷின் அறைக்கு அழைத்துச் சென்ற தமிழ். புதிய மருந்துகள், நன்கு வேலை செய்வதான நற்செய்தி தமிழுக்குச் சொன்ன கீர்த்தி, பிரகாஷினையும் அவரின் பாது காப்பினிற்காகவும் தமிழினால் பொருத்தப்பட்ட இரகசியக் கமறா.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 17.12.2025
மறுவீட்டிற்கு அழைக்க வந்த ஹசீனாவையும், தேனுவையும் மரியாதையீனமாகப் பேசி வெளியே தள்ளிய அமுதா. மாமனாருக்கே குரலை உசத்த வேண்டாம் என்ற அதட்டிய சிபீ. இந்த நேரத்திலும், தமிழை எனக்குப் பிடிக்காதுதான் என்று சொன்ன சிபீ. இந்தக் குடும்பம் எனக்கு ஒரு துரோகம் ஒன்றும் செய்யவில்லை என்று கூறிய சிபீ. அனைவரும் விருந்திற்கு வந்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்திய சிபீ.
ஜனாம்மா கூப்பிட்டும் மறு விருந்திற்குப் போகாமல் இருந்து தங்கள் விருப்பமின்மையினைக் காட்டிய அமுதாவும், கணேஷனும். காரணம் தங்களது மகளுக்கும், சிபீக்குமான இந்தக் கல்யாணம், தமிழுடன் நடந்ததுதான். அதுவும் ஜனாம்மா நடத்தி வைத்ததுதான் இவர்களுக்கான கோபமே.
கோவிலிலே அம்மு அம்மனிடம் வேண்டிக் கொண்டிருந்ததினைக் கேட்டுக் கொண்டு நின்ற அம்முவின் கணவன், தமிழின் அப்பா, அம்முவின் மேல் இரக்கம் கொண்டு, தனக்கு வந்த பூ வந்த தேங்காய் பாதியினை ஐயாவிடம் கொடுத்து, அந்த அம்மா, அம்முவிடம், கொடுக்கும்படியாக கொடுத்துவிட்டுச் சென்றார், செல்வரத்தினம். நன்மைக்காக இதனைச் செய்யலாம் என்று அந்தப் பாதித் தேங்காயானது அம்முவிடம் கையளித்தார் கோவில் ஐயா.
பூ வந்த தேங்காய் கிடைத்ததினால் மிகவும் சந்தோஷமடைந்த அம்மு கஹினாவுடன் சேர்ந்து மாப்பிள்ளையின் மறுவீட்டிற்கு ஆயத்தப்படுத்தினா. அம்மு தனது அம்மா ஜனாம்மாவின் வீட்டிற்குப் போக முடியாத நிலையில், கஹீனாவிடம் அந்தப் பொறுப்பினை ஒப்படைத்தா. அப்படியாக ஜனாம்மா வீட்டிற்குச் சென்ற ஹசீனாவையும், தேனுவையும் மரியாதைக் குறைவாக அமுதாவும், கணேஷனும், நடத்தியதுமல்லாமல், இருவரையும் இழுத்துக் கொண்டு வெளியே தள்ளிய அமுதா.
இதனைக் கண்டு கோபப்பட்டான் சிபீ. நடந்ததினை விளங்கிக் கொண்டான். விருந்திற்குப் போனான். நன்றாக இரசித்து, ருசித்துச் சாப்பிட்டான். ஆனால், இறுதியாக தனது சொந்த அத்தை, தூக்கி வளர்த்தவள், அம்முவிடம் சிபீ கூறியதினைக் கேட்டு கலங்கி நின்ற அம்மு. சந்தோஷமாக விருந்தோம்பய அம்மு நொறுங்கிப் போனா. இதுதான், தேங்காயில் இருந்த பூவின் அர்த்தமா? என்று வியந்து போனா அம்மு.
துரோகம் செய்தாள் தமிழ் என்று நித்தமும் வாய்ப் பாடமாகச் சொல்லும் சிபீக்கு, தான் என்ன சொல்கிறான் என்று விளங்குகின்றதா என்று விளங்கவில்லை. ஏனென்றால், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவள் தமிழ். அவளை ஏமாற்ற வேண்டும் என்று அவளுக்குப் பின்னாலும், முன்னாலும் திரிந்து, ஜன்னல் வழியாக ஏறியும் அவளைக் காதலிக்க வைக்க எவ்வளவோ பாடுபட்டு தமிழைக் காதலிக்க வைத்தான்.
சிபீயின் காதலை நம்பிய தமிழ் எப்போது சிபீயை விரும்பத் தொடங்கினாளோ அப்பவே சிபீ சொல்லி விட்டான் தான் காதலித்தது உண்மையில்லை என்றும், உன்னை ஏமாற்றி வீட்டை விட்டுத் துரத்துவதற்காவே அப்படிச் செய்தேன் என்று கூறியது எவ்வளவுக்கு தமிழைப் பாதித்திருக்கும்.
அதற்காகத்தான் தெய்வமே தமிழை சிபீயின் மனைவி ஆக்கியதாக்கும்!
இதில் துரோகம் செய்தது தமிழா? சிபீயா?
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!