posted 17th December 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- இசை ஜனாம்மாவின் வீட்டிற்கு வந்ததுமல்லாமல் பிரகாஷ் மாமாவிற்கு விபூதியும் கொண்டு வந்தாள். பிரகாஷின் அறையினுள் இருந்த மீனாவும், முத்தம்மாவும், இசையினைக் கண்டதுமல்லாமல் மீனா இசையின் கையாலேயே விபூதியினைத் தொட்டு பிரகாஷின் நெற்றியில் வைத்தா. அப்போது பிரகாஷின் விரல்கள் அசையத் தொடங்கின.
- தமிழைக் கொல்லும்படி வெண்பா அடியாட்களை அனுப்பினா, அந்தப் பழியினை சம்யூத்தாவின் மேல் போகட்டும் என்று.
- இசைக்கு தெய்வத்தின் துணை இருக்கின்றது என்று இங்கு தெரிகின்றது. தமிழைப் பார்க்க வேண்டும் என்று இசை அடம்பிடித்தாள். சிபீயும், இசையினைக் கூட்டிக் கொண்டு கொம்பனிக்குப் போனான்.
- தமிழைக் கொல்ல வந்தவர்களை சிபீ பந்தாடினான். குழந்தைகளில் தெய்வம் இருக்கின்றது என்பது இங்கு தெரிகின்றதல்லவா. தமிழைக் கொல்ல வந்த அந்தக் கையினைப் பதம் பார்த்தான். லவ் கூடிவிட்டதோ என்று தமிழுக்கு doubtம் வந்தது.
- வெண்பாவின் access card டினைக் கொண்டு வந்து வெண்பாவிடம் காட்டிய சேது. இது என்னென்று தமிழை கொல்ல வந்தவர்களின் கைக்குப் போனது? இதனை வெண்பா கொடுத்திருந்தாலும், பழி சம்யூத்தாவின் மேலே வெண்பா போட மாட்டாளா என்ன?
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 15.12.2025
அம்மு பிரகாஷின் அறையினுள் இருக்கையிலே மீனா அறையினுள் நுழைந்தா. ஒருவரும் இங்கு இல்லை என்று மறைத்த முத்தம்மா. ஆனால், இசையும் அப்போது அந்த அறையினுள் விபூதியுடன் வந்தவளாய் மீனா இசையின் கையினைப் பிடித்து மாமனாருக்கு விபூதியினை வைத்தும் விட்டா. அப்போது பிரகாஷின் இடது கை விரல்கள் அசையத் தொடங்கின. ஆனால், ஒருவரும் அதனை அவதானிக்கவில்லை. அம்மு, தமையன் பிரகாஷுடன் கதைக்கையிலே பிரகாஷின் இடது கண்ணிலிருந்து கண்ணீர் சொரிந்ததையும் அம்முவோ, முத்தமாமவோ கவனிக்கவில்லை.
இதுவும் ஒரு நோயாளியை கவனிப்பதில் உள்ள குறைபாடாக தெரிகின்றது.
சிபீக்கு பிரகாஷ் சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்குக் கொண்டு போனதினை ஒருவரும் சொல்ல வேண்டாம் என்று ஜனாம்மா கூறி இருக்கையிலே, வர்ஷினி சிபீக்குச் சொல்லிவிட்டாள். அவனுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஒருவாறாக வர்ஷினி சகமாக்கினாள். தமிழும் அங்கு வைத்தியசாலையில் இருந்ததாக சிபீயிடம் வர்ஷினி சொன்னதினை நினைத்து மனம் வருந்தினான்.
எவ்வளவு திட்டினாலும், தமிழ் தான் செய்யும் நல்ல காரியங்களை பேச்சு வாங்கினாலும் ஒருநாளும் பெருமைப்பட்டு சொல்ல மாட்டாள். இதனைப் பல விஷயங்களில் அவதானித்துள்ளான் சிபீ. கவலைப்பட்டான் தனது அவசரப் புத்தியினால் தமிழைக் கடிந்து விட்டேனே என்று.
அதுமட்டுமா, இசை அடம்பிடித்தாள் தமிழ் அக்காவைப் பார்க்க வேண்டும் என்று. அம்முவாலும், தேனுவாலும் ஒன்றும் செய்ய முடியாமல் அவதிப்படுகையிலே, சிபீ, தானே முன்வந்து இசையினைக் கூட்டிக் கொண்டு கொம்பனிக்குப் போனான்.
தமிழைக் கொல்ல வந்தவர்கள் அப்போது சிபீயின் கையில் அகப்பட்டனர். யார் இவர்கள்? எப்படி உள்ளே வந்தார்கள் என்று கேள்விக்கு மேல் கேள்வியாக இருத்தது பின்பு.
ஆனால், திருடன் ஒருநாள் பிடிபடுவான் என்பதாவது, வெண்பாவின் access cardடினை கொலைஞர்கள் விட்டுச் சென்றதினை சேது கொணர்ந்தான். இது என்னென்று கொலைஞர்களின் கைக்குப் போனது? இது இப்போது கேள்வி வெண்பாவிற்கு இருந்தது. ஆனால், ஒரு gap விட்டால் அதற்குள்ளால் goal அடிக்க மாட்டாளா வெண்பா. கணேஷனின் வளர்ப்பாச்சே! இதைத்தான் காணவில்லை என்று மதியத்திலிருந்து தேடினனான் என்றும், இதனை சம்யூத்தா எடுத்திருப்பாள் என்றும் பச்சையாகப் பொய்யினை ஏன் வெண்பா சொல்ல மாட்டாள்?
இவ்வளவு காலமாக, ஏன் இத்தனை சகாப்தமாக, இப்படியான பிரச்சினைகள் வந்ததாக ஜனாம்மாவின் சரித்திரத்திலேயே இல்லையே. குறிஞ்சி இடைக்கிடை சண்டை போடுவான். அதுவும் நேராகவே. ஆனால், இப்போது கொஞ்சக் காலமாக மறைமுகமாக பிரச்சினைகள் வருகின்றனவே! அதுவும், இப்போ தமிழைக் கொல்லும் அளவிற்கு பிரச்சினையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது என்றால், இப்போது புதிதாக உள்ளவர்களால்தான் இவை உருவாகின என்றும் எண்ணத் தோன்றுகின்றது.
பிரகாஷின் கொலை முயற்சி தமிழின் தகப்பனின் தலையில் விழுந்துள்ளது.
பிரகாஷ் அன்று தொடக்கம் இன்று வரை எதுவிதமான அசைவும் இல்லாமல் அப்படியே இருக்கின்றார். இதற்குக் காரணம், அவருக்குக் கொடுக்கப்பட்ட விஷ மருந்து என்பது இப்போது தமிழுக்குத் தெரிய வந்தது கீர்த்தி மூலமாக.
சம்யூத்தாவின் வரவு. கல்யாணத்தில் குளப்பங்கள். தமிழைக் கடத்தியதுமல்லாமல் அவளைக் கொலை செய்யும் அளவிற்கு போனதற்குக் காரணம்தான் என்ன? யார் காரணம்?
சிபீயின் இந்த வெறுப்பிற்கெல்லாம் யார் காரணம்?
இப்படிப் பலவிதமான கேள்விகள் – விடைகளற்று arrears ஆக இருக்கின்றன.
எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டு. வாழ்வதற்கு ஒரு காலம், வாழ்க்கையில் வதங்குவதற்கு ஒரு காலம். இப்போது ஜனாம்மாவிற்கு வாழுவதற்கான காலமாக இருந்தாலும், இது களையறுக்கும் காலமாகத் தெரிகின்றது.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!