டெங்கு நோயாளர்கள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கிழக்கு மாகாணத்தில் 45 நாள்களுக்குள் 1,363 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டு உள்ளதாக கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணரும் சமூக வைத்திய நிபுணருமான மருத்துவர் எஸ். அருள்குமரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் 780 டெங்கு நோயாளர்களும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 203 டெங்கு நோயாளர்களும், அக்கரைப்பற்றில் 148 நோயாளர்களும் அட்டாளைச்சேனையில் 118 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் ஏழு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 25 நோயாளர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 315 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இந்நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 243 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 87 நோயாளர்களும், உப்புவெளி பகுதியில் 58 நோயாளர்களும், மூதூர் சுகாதார அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 24 டெங்கு நோயாளர்களும், கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 19 நோயாளர்களும், கிண்ணியாவில் 18 நோயாளர்களும், குச்சவெளியில் 16 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

ஆகவே, பொதுமக்கள் சுற்றுப்புற சூழல்களைச் சுத்தமாக வைத்திருப்பதுடன் டெங்கு நுளம்புகள் பரவும் விதத்தில் காணப்படும் பொருட்களை அகற்றவேண்டும் என்றார்.

டெங்கு நோயாளர்கள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)