சதீஸ்குமார் விடுதலை

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான செ. சதீஸ்குமார் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

சுயாதீன ஊடகவியலாளரும், எழுத்தாளருமான செல்லையா சதீஸ்குமார் (விவேகானந்தனூர் சதீஸ்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொது மன்னிப்பில் நேற்று வியாழன் (23) விடுதலை செய்யப்பட்டார்.

சதீஸ்குமார் உட்பட மூன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி ஜனாதிபதியால் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு அவரால் மீளப்பெறப்பட்டதை அடுத்து நேற்று அவர் விடுதலையானார்.

விவேகானந்தர் நகர் கிழக்கு, கிளிநொச்சியை வாழ்விடமாகக் கொண்ட சதீஸ்குமார் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அம்புலன்ஸ் சாரதியாக கடமையாற்றியிருந்தார். 2008 ஜனவரி பணி நிமித்தம் கொழும்பு சென்ற இவரை வவுனியாவில் வைத்து பொலிஸார் கைது செய்திருந்தனர். புலிகளுக்கு உதவினார் என்று அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில் கடந்த 2011ஆம் ஆண்டு ஆயுள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சதீஸ்குமார் விடுதலை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)