
posted 23rd February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முன்னெடுத்த உலகத் தாய்மொழி நாள் நிகழ்வு நேற்று (22) புதன்கிழமை காலை கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பேராதனை பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் வ. மகேஸ்வரன் கலந்து கொண்டு மொழி கற்றலின் அவசியம் குறித்து பேருரை ஆற்றினார்.
நிகழ்வில் விரிவுரையாளர் வே. சேந்தன் பேருரைக்கான அறிமுக உரையை ஆற்றினார் . உலகத் தாய்மொழி நாள் தொடர்பாக ஆசிரிய மாணவர்களின் உரை, கவிதை மற்றும் பாடல்கள் என்பனவும் ஆற்றுகை செய்யப்பட்டன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)