
posted 22nd December 2022
வேக கட்டுப்பாட்டை இழந்த அரச பேருந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த விபத்து புதன் (21) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தே இவ்வாறு பளை முள்ளையடி பகுதியில் விபத்துக்குள்ளானது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியிலே கவிழ்ந்தது விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், பேருந்தில் பயணித்த மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இரு சிறுவர்களுடன், காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தின் போது உயிரிழந்த பெண்ணின் சடலம் கிளிநொச்சி வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பளை போலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)