நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம் இன்று ஆரம்பம்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம் செவ்வாய்க்கிழமை (04) காலை 9:30 மணியளவில் சிவாச்சாரியார் கலாதர்க் குருக்கள் தலைமையிலான அர்ச்சகர்களால் கிரியைகள் நடாத்தப்பட்டு வசந்த மண்டப சிறப்பு புசைகள் இடம் பெற்று நாகதம்பிரான் உள் வீதி வலம் வந்தார்.

தொடர்ந்து பதினொரு தினங்கள் இடம் பெறவுள்ள அலங்கார திருவிழாவில் ஆறாம் திருவிழாவான 09/10/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பாம்புத் திருவிழாவும், ஏழாம் திருவிழா 10/10/2022 திங்கட்கிழமை கப்பல் திருவிழாவும், 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வேட்டைத் திருவிழாவும், 12ஆம் திகதி புதன்கிழமை சப்பற திருவிழாவும், 13 ஆம் திகதி வியாழக்கிழமை கப்பல் திருவிழாவும், 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை சமுத்திர தீத்த தீருவிழாவும் அன்று பிற் பகல் பட்டு தீர்த்தமும் இடம்பெறுவுள்ளதன.

அடியார்கள் ஆசார சீலர்களாக ஆலயத்திற்க்கு கலாசார உடையணிந்து வருமாறு ஆலய பரம்பரை அறங்காவலர் சபை அறிவித்துள்ளது.



நிகழ்ச்சி நிரலை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்>>>>>வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார திருவிழா நாளை

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம் இன்று ஆரம்பம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More