வடமராட்சி கிழக்கு  நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார திருவிழா  நாளை
வடமராட்சி கிழக்கு  நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார திருவிழா  நாளை

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார திருவிழா ஆரம்பம் நாளை செவ்வாய்க்கிழமை (04) காலை 9:30 மணிக்கு கலாதர்க் குருக்கள் தகமையிலான அர்ச்சகர்களால் கிரியைகள் நடாத்தப்பட்டு ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து பதினொரு தினங்கள் இடம் பெறவுள்ள அலங்கார திருவிழாவில் ஆறாம் திருவிழாவான 09/10/2022 ஞாயிற்றுக் கிழமை அன்று பாம்புத் திருவிழாவும், ஏழாம் திருவிழா 10/10/2022 திங்கட் கிழமை கப்பல் திருவிழாவும், 11ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வேட்டைத் திருவிழாவும், 12ஆம் திகதி புதன் கிழமை சப்பற திருவிழாவும், 13 ஆம் திகதி வியாழக் கிழமை சமுத்திர தீர்த்தமும், 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை பட்டு தீர்த்தமும் இடம்பெறுவுள்ளது.

அடியார்கள் ஆசார சீலர்களாக ஆலயத்திற்க்கு கலாசார உடையணிந்து வருமாறு ஆலய பரம்பரை அறங்காவலர் சபை அறிவித்துள்ளது.

வடமராட்சி கிழக்கு  நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார திருவிழா  நாளை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)