posted 4th February 2026
இன்றைய Serial Review & Analysis ஆனது 02ஆம், 03ஆம் திகதிகளை உள்ளடக்கிய Serial Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- பூமி கடத்தப்பட்டாள். இதற்கு மீராவைக் காயப்பட வைத்து பூமி மூலமாக மீராவை வைத்தியசாலைக்குக் கொண்டு போக வைத்து, இடையில் பூமியைக் கடத்திக் கொல்வதற்காக திட்டத்தினைப் போட்ட அபூர்வா.
- இதை அறிந்து கொண்ட கிறிஷ்ணபிரஷாத்தின் அம்மா உடனே இதனை கிறிஷ்ணபிரஷாத்திடம் சொல்லி ககனை அங்கு அனுப்ப வைத்தார், பூமியைக் காப்பாற்றுவதற்காக.
- குளிர் அறையினுள் அடைக்கலமான பூமியை உள்ளே உள்ளபடி அடைத்த நட்சத்திரா. ஆனால், அவளின் மாமா ககனும் குளிர் அறையினுள்தான் என்பதனை அறியாதவளாய் அவளும். இதுதான் பிள்ளை, தாயை விடப் பாய்வதில் உசத்தி என்பதா? பேஷ் பேஷ்.
Salangai Oli - சலங்கை ஒலி - 02 - 03 .02 . 2026
- கிறிஷ்ணபிரஷாத்தின் ஏகமனதான முடிவானது, இப்போது உலகத்திற்கே ககனையும், பூமியையும் அவர்களது காதலையும் உண்மையாக்கி விடுவதற்காக பிரசுரமாக்கிக் கொண்டிருக்கின்றதே!
- அபூர்வாவின் திட்டமானது குடி போதையில் இருந்த நட்சத்திராவால் ககனிடம் வெளியிடப்பட்டது ஒரு புறம், ககனிடம் உள்ள காதலை பூமியிடம் கூறியது மறுபுரம்.
- மீடியாவினால், பூமியின் characterஐக் கொச்சப்படுத்திய நிலையில், அதனை நியாயப்படுத்திய கிறிஷ்ணபிரஷாதினால், குளம்பிப் போயிருந்த பூமி, ககனை சந்தித்தாள்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
பூமி இருந்தால் இனி சட்ட ரீதியாக தனக்கு நித்தியத்திற்கும் தலையிடியானது தொடரும் என்று நினைவினில் அபூர்வாவுக்கு உருவாகியது. இதனால், பூமியின் கதையினை முடித்து விடத் தீர்மானித்தாள் அபூர்வா. இதற்காக அடியாட்களை ஒழுங்கு படுத்தியவளாய் மீராவுக்கு ஆபத்தினை உண்டாக்கி, அவவை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு பூமியைப் பொருந்தும்படி சூழ்நிலையினை உருவாக்கினாள் அபூர்வா.
இடைநடுவில் பூமி கடத்தப்பட்டாள். தன்னைக் கடத்துவது யாரென்று தெரிந்தும், வெளியில் சொல்ல முடியாமல் பூமி அமைதியாக இருப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகின்றது.
இதற்கிடையில், நட்சத்திரா ககனைத் தன் வலையினில் விழ வைப்பதற்காக, கிளப்பினில் நடைபெற்ற பிறந்த நாள் விருந்திற்கு ககன் வருவான் என்று எதிர்பார்த்தவளாய் தன்னாலான திட்டத்தினை ஒழுங்கு படுத்தினாள்.
பூமியின் கடத்தல் விஷயமானது அபூர்வாவால் வெளியிடப்பட்டதனை அறிந்து கொண்ட கிறிஷ்ணபிரஷாத்தின் அம்மா, உடனே அந்தத் தகவலை கிறிஷ்ணபிரஷாத்திடம் தெரியப்படுத்தினா.
ஷரத்சந்திராவின் கொலை முயற்சியானது அடுத்த suspectஆக Cheryயின் மேல் விழுந்தது. ஆனால், Cheryயின் நியாயமான கேள்விகளும், பதில்களும் அவனை அந்த சந்தேகத்திலிருந்து இப்போதைக்குக் காப்பாற்றியது.
ஆனால், ACP நயினி, ஷரத்சந்திராவின் கொலை முயற்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்ததின் பின்பு அந்த புகைப்படங்களில் போத்தலின் அடிப்பக்கமே ஷரத்சந்திராவின் வயிற்றினில் இருந்தது தெரியவந்தது.
இப்படியான படத்திற்கு விளக்கமாக, போத்தலானது விழுந்து உடைந்த நிலையினில், மேல் பக்கமான உடைந்த போத்தலின் பகுதியானது தள்ளி விழுந்திருக்க, கீழ்பக்க போத்தலின் பகுதியானது நிலத்தினில் நிமிர்ந்து நிற்கையிலே அதன் மேலே ஷரத்சந்திரா விழுந்ததினால், தவறுதலாக அந்த போத்தலின் அடிப்பாகமானது ஷரத்சந்திராவின் வயிற்றினில் குற்றி இருக்கலாம் என்றும் உகிக்க இடமுண்டு.
ஆனாலும், குற்றிய குற்றவாளி, போத்தலை இவ்வாறாகக் குத்தி பொலிஸினை வேறுபக்கம் திசை திருப்பியிருக்கலாமல்லவா? இது, பூமியைக் கொலை செய்வதற்கு வாய் பேசாத அடியாட்களை அனுப்பியது போன்றுள்ளது.
கொலை செய்யத் துரத்தி வந்த அடியாட்களிடமிருந்து தப்பி ஓடிச் சென்ற பூமி, இறுதியாக குளிர் அறையினுள் தஞ்சமடைந்தாள். அடியாட்களை அடித்துத் தள்ளி விட்டு பூமியைத் தேடி ஓடிச் சென்ற ககனும் அதே அறையினுள் சென்றிருகையிலே, இதனைக் காணாத நட்சத்திரா அந்த குளிர் அறையினுள் பூமி மட்டும்தான் இருக்கின்றாள் என்று நினைத்தவளாய் அதனைப் பூட்டி விட்டுச் சென்றாள்.
ஷாரதாவிற்கு கிறிஷ்ணபிரஷாத் இந்த விஷயத்தினைத் தெரியப்படுத்தியதுமல்லாமல், உடனே பூமியைக் காப்பாற்றுவதற்காக ஓடோடிச் சென்று பார்கையிலேதான் அந்த குளிர் அறையினுள் தனது மகன் ககனும் அகப்பட்டுள்ளான் பூமியுடன் சேர்ந்து என்று அறிந்து கொண்டார். அது மட்டுமல்லாமல், ககனையும், பூமியையும் அன்று இரவில் தனிமைப்படுத்த நினைத்தவராய், இவர்கள் போகாத வண்ணம் ககனின் காரின் திறப்பினை ஒழித்து விட்டார் கிறிஷ்ணபிரஷாத்.
ககனுக்கும் கிடைத்த அனுபவமான அந்த மரணத்தின் வாசலினைக் கண்ட பயத்தினிலும், பூமியையும் இழந்து விடுவேனோ என்று பயம் மறுபக்கம் வருத்தியதினாலும், ககனோ களைத்து விட்டான். அவனையும் மறந்து குளிரில் விறைத்துப் போயிருந்த பூமியைக் காப்பாற்றும் நோக்கத்தில் அவளை இறுகக் கட்டிப்பிடித்தவனாய் அயர்ந்து விட்டான். ஆனால், இவர்களின் தூய்மையான நோக்கத்தினைப் புரிந்து கொள்ளாமல், எப்பவுமே தவறாக நினைக்கும் சமுதாயமானது, அதேமாதிரி பூமியையும், ககனையும் தவறாகப் படம் பிடித்துக் காட்டியது.
இதனால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானாள். ஆனால், பூமியைப் புரிந்து கொள்வதற்கும், அவளின் மேல் அளவிற்கடந்த நம்பிக்கையினைக் கொண்டவர்களாக, ஷாரதா, மீரா, கிறிஷ்ணபிரஷாத், கிறிஷ்ணபிரஷாத்தின் அம்மா, Chery என்று பல பேர் உள்ளார்கள். அதனையும் தாண்டி பழிமுடிந்தாள் அபூர்வா. அதற்கு மேலான ஆதாரமாக தங்களது குடும்ப கௌரவத்தினை எல்லார் முன்னிலையிலும் அறிக்கையிட்டாள்.
எல்லார் மேலும் இருந்த கொலை முயற்சியின் சந்தேகமானது இறுதியாக ககனின் மேலே போய் நின்றது. ஆனால், அங்கு ககன் ஏன் போனான் என்று கேட்கையிலே அது தனது தனிப்பட்ட விஷயம் என்று கூறியதில் உண்மையான பதில் இருப்பது மாதிரித் தெரிகின்றது.
அபூர்வாவின் இந்த பூமியின் கொலை முயற்சியினை சாட்சிப் படுத்தியுள்ள நட்சத்திராவின் வாக்கு மூலமாக ககன் வைத்திருக்கும் அந்த வீடியோப் பதிவானது இப்போது அபூர்வாவினது வாழ்க்கைக்கே சவாலாக இருக்கின்றது.
இந்த சூட்சுமத்தினை உருவாக்கிய அபூர்வாவின் குள்ளத்தனத்தினை தனக்குச் சாதகமாக்கிய கிறிஷ்ணபிரஷாத், எப்படியாவது ககனின் மனதினை மாற்றி பூமியைக் கல்யாணம் பண்ணட்டும் என்று தீர்மானித்தார். இதற்கு மிகைப் படுத்தியது மீடியாவின் செய்தியானது.
ககனினதும், பூமியினதும் காதல் கை கூடுமா? அதுவும் கல்யாணத்தில் முடிவுறுமா, அதுவும், ஷரத்சந்திராவின் கோமா நிலையினைச் சாதகமாக ககனும், பூமியும் பயன்படு்த்தி விட்டார்கள் என்ற வீண் பழியானது இவர்கள் மேலே விழுந்து விடுமா?
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!