
posted 26th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இரவோடிரவாக விகாரைக்கு காணி; திருகோணமலையில் பதற்றநிலை
விகாரை அமைப்பதற்காக இரவோடிரவாக பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் துப்பரவு செய்யப்பட்டமையால் திருகோணமலையில் பதற்றநிலை உருவாகியுள்ளது.
திருகோணமலை - குச்சவெளி - இலந்தைக்குளம் - 5ஆம் கட்டை பகுதியிலேயே இந்த நிலைமை ஏற்பட்டது.
இந்தப் பகுதியில், நேற்று (25) வியாழக்கிழமை இரவு பிக்கு ஒருவரின் தலைமையில் இந்தத் துப்பரவுப் பணி நடைபெற்றது. விடயமறிந்து அந்தப் பகுதியில் குவிந்த பொதுமக்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று (26) வெள்ளிக்கிழமை குச்சவெளி பிரதேச செயலாளரின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து துப்பரவுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
இலந்தைக்குளத்தில் பரம்பரையாக வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்கள் போரால் 1990ஆம் ஆண்டு போரால் இடம்பெயர்ந்தனர். அவர்கள் தம்மை மீளக்குடியமர அனுமதிக்குமாறு தொடர்ச்சியாக அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையிலேயே, அந்த மக்களின் காணிகளில் விகாரை அமைக்கும் நோக்கில் பிக்கு ஒருவர் ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)