Varisu - வாரிசு - 29 & 30.08.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

இந்தப் பதிவானது, 29ஆம், 30ஆம் திகதிகளை உள்ளடக்கியுள்ளது.

  • குறிஞ்சிநாதன் தனது குள்ளப் புத்தியினைப் பாவித்து ஜனா Foods உடைய Share holders இனை 100% உங்களுக்குத் தாறேன் என்று ஆசையினைக் காட்டியது, ஆப்பினை தனக்குத் தானே அடித்துக் கொண்ட கேவலமான முயற்சி.
  • தமிழ் ஜனாம்மாவின் வீட்டிலுள்ள பழைய போட்டோக்களைத் தூசி தட்டித் துடைத்து அவற்றில் ஒரு சிலவற்றினை பிரகாஷ் மாமாவின் அறையினுள் தொங்க விடுகின்றா. அத்துடன், தனது அம்மா, அதுதான் ஜனம்மாவின் மகளும், ஜனாம்மா இருவரும் ஒன்றாக எடுத்த போட்டோவினையும் ஹோலுக்குள்ளேயும் கொளுவினா. இன்னமும் ஜனாம்மாவுக்கு கோவம் இருக்கின்றதா என்று ஒரு பரீட்சையம்.
  • ஜனாம்மாவின் திட்டமே தமிழினாதாகவும், தமிழின் திட்டமே ஜனாம்மாவின் திட்டமாகவும் இருந்தது. அந்தத் திட்டத்தில் குறிஞ்சிநாதனுக்குக் கற்பித்த பாடம், ஜனாம்மாவைத் தோற்கடிக்க இன்னமும் ஒருவனும் பிறக்கவில்லை என்பதுதான்.
  • சிபீக்கு எவ்வளவுதான் தமிழ் சொன்னாலும், எவ்வளவு பிரச்சனைகள் ஜனாம்மாவுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கின்றது என்று கூடத் தெரியாமல், தமிழைப் பழி வாங்கியே தீருவேன் என்று அதிலே குறிவைத்துக் கொண்டிருக்கும் சிபீ. இந்தக் கேவலத்தில் சிபீதானா ஜனாம்மாவின் வாரிசு?

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

வாரிசு - Varisu - 29 & 30.08.2025

இதற்குத்தானா சாமியின் விளக்கு அணைந்தது? இல்லை என்று நினைக்கின்றேன். அதற்கு ஏற்பாடாகத்தான் குறிஞ்சிநாதன் தனது ஆளை கணேஷன் மூலமாக உள்ளே அனுப்பி உள்ளானே. இதை உணர்த்துவதாகத்தான் சாமியின் விளக்கு அணைந்து காட்டியது. கடவுளை நம்பியிருக்கும் பக்தர்களை தெய்வங்கள் கைவிட்டு விடுமா – ஒருக்காலும் கைவிடாது.

முருகப் பெருமானின் பக்தையாக இருக்கும் ஜனாம்மாவைக் கை விட்டதா அந்தத் தெய்வம். சரியான நேரத்தில் கள்ளனைக் காட்டிக் கொடுத்ததுமல்லாமல், அறிவையும், ஆற்றலையும் ஜனாம்மாவுடைய teamக்கே கொடுத்து அவனுடைய businessஐயே கைப்பற்ற வைக்கவில்லையா. இதுதான், தெய்வ நம்பிக்கை, ஜனாம்மாவைப் பார்பதில் இருந்து தெரியும்.

தமிழுக்கு எவ்வளவோ பிரச்சனைகளை ஜனாம்மாவின் வீட்டில் உள்ளவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள், சேதுவைத் தவிர. அத்தனையும் தாண்டி தமிழ் பொறுமையுடன் எல்லாவற்றினையும் சகித்துக் கொண்டு, அழுது கொண்டு கடந்து வருவதனையும் பார்ப்பதிலே எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் உண்டு என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது.

குறிஞ்சிநாதனோ, ஜனாம்மாவுடன் நேராக மோதுகின்றான். அப்போ எல்லாருக்கும் தெரியும் அவன் எதிரி என்று. ஆனால்,ஜனாம்மாவின் வீட்டிலுள்ள துரோகிகளை என்னென்று அடையாளம் காணுவது? என்னென்று இவர்களைக் கண்டு பிடிப்பது? கணேஷன் எத்தனை வருஷ காலங்களாக பிரகாஷுகு நஞ்சினை உடலுக்குள் ஏற்றி பிரகாஷை இயக்கமற்ற நிலையிலே வைத்துக் கொண்டிருக்கின்றானே. இவனை என்னென்று அடையாளம் காணுவது? எப்போதுதான் கண்டுபிடிப்பது? கணேஷனைப் போன்றவர்கள்தான் மக்களுடன் மக்களாக, உறவுகளாக, நண்பர்களாக, உடன் பிறப்புகளாக சேர்ந்திருப்பார்கள். கண்டு பிடிக்கவே முடியாத விஷக் கிருமிகள் அவர்கள்.

இப்படியான சந்தர்ப்பங்கள் உங்கள் வாழ்க்கையிலும் அனுபவித்தீர்களா? சொல்லுங்கள்.

ஜனாம்மா இளம் வயதில் இருந்தது போன்ற விம்பமாகத் அனைவருக்கும் தோன்றுகின்றாள், தமிழ். அது ஏன் ஜனாம்மாவிற்கு விளங்குவதாக இல்லை.

தனது மகளினதும், தனதுடைய அந்த போட்டோவினைக் கண்டதும் கோபமடைந்த ஜனாம்மா அந்தப் போட்டோவினைத் தூக்கி எறிந்து உடைத்து விட்டா. ஜனாம்மாவின் கோபத்தின் அகோரத்தினை அந்த போட்டோ எறிந்ததிலும், உடைத்ததிலும் தெரிகின்றது. அந்தக் கோபமானது ஜனாம்மாவின் மகளில் இல்லை. மாறாக, கணேஷனால் சொல்லப்பட்ட பொய், அதாவது, தமிழின் தகப்பன், சொத்துக்காக பிரகாஷைக் கொல்ல முயன்றது என்பதுதான். அந்தத் துரோகியுடன் தன் மகள் வாழுகி்ன்றாளே என்ற கவலைதான் ஜனாம்மாவிற்குரிய கோபமாக இருக்கின்றது.

இதனை தமிழ் இன்னமும் விளங்கிக் கொள்ளவில்லை. ஏனென்றால், ஜனாம்மாவின் கோபத்தில், தமிழுக்குக் கை ஓங்கி அடிக்கப் போனதால் தமிழ் பயந்து விட்டாள். அந்தப் பயத்தில் தமிழ், ஜனாம்மா சொன்னதினை விளங்கிக் கொள்ளவில்லை. ஆனால், நடந்ததினை இரை மீட்கும்போது இந்தப் pointஐ தமிழ் கண்டு பிடிப்பாள்.

மிகவும் சந்தோஷத்தில் மிதக்கையிலே, குறிஞ்சிநாதனை நோக்கி ஒரு அதிர்ச்சி வந்தது. அதுதான், ஜனாவும், அவவின் குளாமின் entry. நக்கலில் சிரித்த குறிஞ்சிநாதன், அடுத்த நிமிடம் தனக்கு என்ன நடக்கப்போகின்றது என்று கூடச் சிந்திக்காமல், தன்னைச் சுற்றி நிற்பவர்கள் யார் என்று கூடச் சுதாகரிக்காமல், ஜனாகாம்பாளை விழுத்தி விட்டேன், அவளை தன் கைக்குள் கொண்டு வந்துவிட்டேன் என்று பெருமித்துடன் ஆடுகையிலேதான் தனது நிலைமையினையும், தன்னைச் சுற்றி உள்ளவர்கள் யார் என்பதனையும் அறிந்து கொண்டான்.

இதே போலத்தான், குறிஞ்சிநாதன், ஜனாம்மாவின் கொம்பனியினுள் அனுப்பியவனும் ஒருநாள் அகப்படுவான். அதுவும் மிக விரைவில் நடக்கும். ஏனென்றால், ஜனாம்மாவின் கொம்பனியினுள் உண்மையாக உள்ளவர்கள் யார்? குறிஞ்சிநாதனின் கொம்பனியினுள் உள்ளவர்கள் யார்? என்று ஒருத்தருக்கும் தெரியவும் வராது. அப்போ குறி்ஞ்சிநாதனின் குள்ளன் கெதியில் அகப்படுவான். சிபீ சும்மா ஒன்றுக்கும் உதவாத கொமடி பீஸ் என்றுதான் சொல்லலாம்.

இப்போ குறிஞ்சிநாதனுக்கு கடிவாளம் போட்டதாகிவிட்டது. அதைக் களட்டி விட்டால்தான் அவன் வாயைத் திறக்கலாம்.

இதற்கொருக்கால், பொலிஸுக்கா போக வேண்டும். இந்தப் பிடியே காணுமே, சீவிய காலத்திற்கு, குறிஞ்சிநாதனுக்கு.

இனி என்னதான் நடக்கலாம்?

  • சிபீ, தமிழுக்குக் காதல் வலை வீசுவான். தமிழ் என்ற எலிக்குஞ்சா அகப்படுவதற்கு? அவள் திமிங்கலம், பிய்த்து எறிந்து கொண்டு வெளியேறுவாள். ஆனால், தன்னைத் தமிழ் எவ்வளவுதான் கேவலப்படுத்தினாலும், சிபீ அவளைப் பழிவாங்கும் படலத்தினைத் தொடர்ந்து கொண்டே இருப்பான்.
  • தமிழ் பிரகாஷ் மாமாவின் அறையினுள் போவாள். இது வழமையா அவள் செய்யும் முயற்சிகளில் ஒன்று, அதனை அவள் தன் கடமையாவும் நினைக்கின்றாள். அத்துடன் இது அவளின் சுயநலமாகவும் இருக்கலாம் என்றும் கூறலாம். பிரகாஷ் மாமா எழும்பினால்தான், அவர்தான் தனது தங்கை, தமிழின் அம்மாவுக்கு கல்யாணம் பண்ணி வைத்ததினைச் சொல்லுவார் – அதனால், பிரச்சனைகள் தீர வாய்ப்புண்டு என்ற ஒரு நம்பிக்கை.
  • தமிழ் தற்செயலாக பிரகாஷ் மாமாவின் அறையினுள் போவாள். அன்று, கணேஷன் மாமாவின் dripபினுள்ளே ஏதோ மருந்து ஏற்றுவதனைக் கண்டு கொள்ளுவாள். அதனைத் தடுப்பதற்கு தமிழ், கணேஷனுடன் சண்டை போடுவாள். இதனால், accident ராக அந்த ஊசி கணேஷனின் கையினுள் ஏறி விடும். மருந்தும் கணேஷனின் உடம்பினுள் ஏற்றப்பட்டு விடும். இதனால், கணேஷனும், பிரகாஷ் மாதிரி இயக்கமற்ற நிலைக்குப் போவான். இதனை வைத்துக் கொண்டு தமிழ் பிரகாஷ் மாமாவிற்று ஏற்றபடும் மருந்தனைக் கண்டு பிடிப்பாள். இனியென்ன சனி கணேஷனின் தலையுச்சியில் ஏறிவிடும். அவ்வளவுதான்.

நடக்கவுள்ளவைகள் இன்னமும் நடக்குமென எதிர்பார்ப்பவை;

  • கணேஷனுக்கும், குறிஞ்சிநாதனுக்கும் உள்ள தொடர்பினை வெளியில் கொண்டு வருவாள். இதனைச் சொல்லக் கூடாது என்றிருந்த தமிழ் வெளியில் சொல்லுவாள்.
  • ஜனாம்மா சொன்னதினை மறந்து விட்டாவோ? அதாவது, என்ன வேண்டுமென்றாலும் கேளு என்று தமிழுக்கு ஜனாம்மா சொன்னது ஞாபகம் இருக்கின்றதா உங்களுக்கு? என்னத்தினைக் கேட்பாள் தமிழ்? என்னத்தினை கொடுப்பா ஜனாம்மா? கொமேன்றில் சொல்லுங்கள்.
  • வீட்டிலிருக்கும் சேது, வீட்டில் தமிழுக்கு எதிரான ஒவ்வொருவரினுடைய நடவடிக்கைகளையும் தமிழுக்கு update பண்ணிக் கொண்டிருப்பான்.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை Description னில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, அத்துடன் share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!