
posted 28th August 2025
சுகமான வாழ்க்கைக்கு எம்மை சுகமாக்குவது நாங்களே!
சுகமற்ற வாழ்விற்கு நுண்கிருமிகள் தேவையில்லை; நாங்களே போதும், நானிலத்தின் மனித உயிர்களைச் சீரழிக்க.
நாங்கள் சிந்திக்கப் பல உண்டு. சந்திக்கப் பல சவால்கள் உண்டு.
பிரச்சினைகளைத் தேடிப் போகத் தேவையில்லை – பிரச்சினைகளே நாங்கள்தான்.
நம்மைத் திருத்துவோம் – உலகமே தானாகவே சுகமாக வாழ்வைப் பெறும்.
Healthy Life Hacks Channelனில் கூறவது, நாம் எவ்வாறு சுகமாகவும், நிம்மதியாகவும், கவலையின்றி வாழ வேண்டும் என்பதனைப் பலவிதமான வாழ்க்கையின் நிஜங்களை துல்லியமாகச் சுட்டிக்காட்டி, எமக்குக் கிடைத்த இந்த குறுகிய கால வாழ்க்கையினைச் சந்தோஷமாகவும், சுகாதாரமாகவும் சீவிப்பதற்காக ஒரு சிறு துரும்பான வழிகாட்டியே ஆகும். இதனை, இடைவிடாது பார்த்துப் பயன் அடைவோம். அடைவீர்கள்.
நன்றி.
சுகமான வாழ்க்கைக்கு எம்மை சுகமாக்குவது நாங்களே!
எமது நல் வாழ்விற்கு நல்ல சத்து உணவுகள், ஆரோக்கியமான அப்பியாசம், தேவைக்குரிய தூக்கம் என்று பலவிதமான பழக்க முறைகளை நாங்கள் வழக்கமாவும், பழக்கமாகவும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றோம். அனால், எப்பவும் மனதினைக் குடைஞ்சு கொண்டிருப்பனவற்றால் மேலே கூறப்பட்டவையினால் பெற்ற நன்மைகளை அனுபவி்த்திருப்போமா? இல்லையே!
எனவே, அவையெல்லாம், எமக்கு நன்மையாக அமைய, அடிப்படையான உண்மை நிறைந்த வாழ்க்கையினைத் தேடிப் போவோம்.
அவற்றினைத்தான் இங்கு கூறவுள்ளோம்.
நாங்கள் மனிதர்கள். மன்னிக்கும் குணம் படைத்தவர்கள். எமது வாழ்க்கையிலே மன்னிச்சு, வாழ்ந்துதான் பார்ப்போமே!
ஒருமுறை, ஒருவரை ஒருவர் மதிக்கக் கற்றுக் கொள்ளுவோம். மிதிக்கவல்லவே! மதித்துத்தான் பார்ப்போமே – மதிக்கப்படுவீர்கள்.
ஆனால், யாரையும் உங்கள் வாழ்க்கையில் எப்போவாவது மிதித்துப் பாருங்கள் – ஒருநாள் வாழ்க்கை உங்களை மிதிக்கும். அதுவும் மிகவும் கொடூரமாக.
அனுபவித்தவர்கள் உங்கள் அனுபவத்தினை இங்குள்ள descriitonனில் சொல்லுங்கள்.
நல்லனவற்றினைச் நினைத்து – நல்லனவற்றினைச் செய்தால் – வாழ்க்கை பிரகாசமாக இருப்பதுமல்லாமல், நலம் நிறைந்த வாழ்வாக அமையும்.
பரம்பரைப் பகைகளை மனத்தினுள் மூடை மூடையாக கட்டி வைத்துக் காவல் காத்துக் கொண்டிருக்கின்றோம். அப் பகைகள் மேலும், மேலும், வட்டிக்கு மேல் வட்டி வளர்ந்து மலை போல நம்முள் எரிமலையாகக் குமுறிக் கொண்டிருக்கும். இதனால், மனமோ பாரமாகின்றது – உடலோ பாதிக்கப்படுகின்றது.
எனவே, மனதின் கனத்தினை, மனத்தினுள் சுமக்காது, தூக்கி எறியுங்கள். மறக்கப்பாருங்கள் – இல்லையேல், உங்கள் நிலையினை நீங்களே மறக்க வேண்டி வரும். பின்பு என்னதான் நடக்கும் என்று நினைக்கின்றீர்கள்? மனத்தின் சுமை வாழ்வினையே அழித்துவிடும்.
இதென்னடா அநியாயமாக இருக்கின்றது? என்று கூட உங்கள் மனதினுள் முனகுகின்றீர்களா?
நீங்கள் நினைப்பது, சரியிலும் சரிதான்.
ஏனென்றால், துரோகங்கள் மறக்க முடியாதுதான். காயத்தால் ஏற்பட்ட துயரங்கள், துன்பங்கள், தாங்கிச் சென்ற வலிகள், றணமாக இருந்ததினால் அனுபவித்த வேதனைகள், இழப்புக்கள் மீண்டும் பெறப்படாத வாழ்க்கை எல்லாம் என்னென்று மறப்பது? என்று அனுபவித்தவர் பக்கம் உள்ள நியாயங்கள் அவை.
அதற்குப் பழிக்குப் பழி என்று போனால் இந்த உலகம் தாங்காது. காலங்கள் போதாது. எமக்குள்ள காலங்கள் மிகவும் சொற்பம். அந்த சொற்ப காலங்களை மற்றவருக்காக ஏன் நரகமாக்க வேண்டும்.
ஆனாலோ, ஆற்றப்பட்ட துயரங்கள் ஆறாததுதான் – நீறுபூத்த நெருப்பாக இருக்கும்தான்.
நீங்கள் இழந்த இழப்புகள் – மீண்டும் மீழப்பெற முடியாததுதான்.
உங்களுக்கு எதிராக இளைக்கப்பட்ட வினைகள், அதனால் பட்ட துன்பங்கள், அனுபவித்த வேதனைகள் – மற்றவர் சுலபமாகச் சொல்லலாம் – மறந்திருங்கள், மன்னித்து விடுங்கள் என்று – அதன் வலிகள் பல எனக்கும் இருக்குத்தான் – நானும் மனிதன்தானே! இல்லாமலா போய்விடும்.
இறுதியில் என்னத்தினைக் கண்டு விட்டோம், நம் மனதினுள் வைத்துச் சுமந்து கொண்டிருப்பதனால்? – உள்ளத்தில் உலாவிக் கொண்டிருந்த வலிகளெல்லாம் – உடலையும், உள்ளத்தையும் தாக்கியதுதான் மிச்சம் – இறுதியில், நோய்களை எல்லாம் தேக்கி வைக்கும் உச்சத்திலுள்ள தாங்கியாகி விடுவோம். இன்னோருக்காக எம் வாழ்க்கையினை அதுவும் பிரயோசனமற்றோருக்காக ஏன் தியாகம் செய்ய வேண்டும்?
எங்களில், அநேகமானோரால் தாங்கித் தாங்கி, மனதினுள் புளுங்கிப் புளுங்கி – ஒருவர் ஒருவருடன் கதைத்துக் கதைத்து – எதிரிகளாக நினைப்பவர்களைத் திட்டித் தீர்த்து, ஒருகரை கண்டிருப்போம்தானே!
இறுதியில் என்னத்தைதான் கண்டோம் – நாங்களே எங்களை நோயாளிகளாக்கி விட்டதுதான் மிச்சம்.
இதெல்லாம் பார்த்தால், நாங்களே எங்களுக்குச் சூனியம் வைத்தது போல இருக்கின்றதல்லவா?
ஆகவே, கொஞ்சம் கொஞ்சமாக, மற்றவர்களால் எமக்கு ஏற்படுத்தப்பட்ட துன்பங்களை, துரோகங்களை, இழைக்கப்பட்ட இன்னல்களை, இழப்புக்களை, இப்படி எல்லாவற்றையும் மறப்பதைப் பழகிக் கொள்ளுவோம். இது மிகவும் றொம்பக் கஷ்டம்தான். இதெல்லாம், பிரகாசமான, சந்தோஷமான வாழ்வுக்காகத்தான்.
மன்னித்து, மனதினுள் உள்ள தீயனவற்றினை மறந்து பாருங்கள், மனங்களோ வெகுவாக இலேசாகுவதனை உணருவீர்கள். மனத்தினால் இதுவரை சுமந்த பாரங்கள் விலகுவதனையும் உணர்வீர்கள். நிம்மதி பூத்துக் குலங்கும்.
இதுமட்டுமா, வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தினையும் விட்டுவிடக் கூடாது. ஒருவரை ஒருவர் நேசிக்க மறக்கவும் கூடாது. இதெல்லாம் உள்ளத்தினுள் இருந்து ஊற்றெடுக்க வேண்டும்.
ஒருவரைப் பழிவாங்க வேண்டுமென்று நினைத்துவிட்டால், எவ்வளவு காலங்களாக எங்கள் மனதினுள் அதனை வைத்து, உருப்பெற வைத்து, சந்தர்ப்பம், சூழ்நிலைகளை எல்லாம் நமக்குச் சாதமாக வரும் வரைக்கும் காத்துக் கொண்டிருந்திருப்போம்தானே. இவ்வாறு செலவு செய்த அவ்வளவு காலத்தின் ஒரு பின்னத்தினையாவது, மன்னித்து அன்பினை விதைக்க வேண்டுமென்று திட சங்கர்ப்பம் பூண்டு பாருங்கள், வாழ்க்கை தரும் உண்மையான பிரகாசம் அங்கு, அப்போது தெரியும்.
நேசிப்பதும், மன்னிப்பதுமான வாழ்க்கைதான் மனித வாழ்க்கை. இதுதான் அமைதியான வாழ்க்கையின் அத்திவாரத்தின் முதற்கல்லாகவும் இருக்கும்.
துன்பங்களும், துரோகங்களும் தூய்மையான வாழ்க்கையினை சீர்குலைத்து உருக்குலைத்து விடும். எங்கள் உருவத்தினைப் படிப்படியாக உருமாற்றி விகாரமாக்கி விடும்.
இப்படித்தானா இறைவன் எம்மைப் படைத்தான்? வில்லங்கமாக உருமாறி, உருக்குலைந்து வாழு என்றா இவ்வுலகில் எம்மை விட்டான். நாங்கள் தானே இவற்றைத் தேடிக் கொண்டோம். இவை எல்லாம் நாங்கள் விதைத்துக் கொண்டவை. அவையெல்லாம் மீண்டும் எம்மைத் தேடி பல மடங்காக உருப்பெற்று வந்தே தீரும். நம் வாழ்க்கையின் மாற்றமானது, எவ்வாறு இருக்குமென்றால், எவையெல்லாம் நாங்கள் மற்றவருக்கு விதைத்தோமோ அவைதான் எம் வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டுமென்று முடிவெடுக்கும்.
நல்லவற்றை நாங்கள் விதைத்திருந்தால் நன்மைபயக்கும், இன்பமான, ஒளிமயமான, பிரகாசம் நிறைந்த வாழ்வானது நம்மை சுதந்தரிக்கும்.
ஆனால், தீயனவற்றினை நாங்கள் உவந்தால், தீமை நிறைந்த, துக்ககரமான, இருள் நிறைந்த வாழ்வாக நம் வாழ்க்கையினைக் கவ்விக் கொள்ளும்.
சந்தோஷமாக இருப்பதும், சந்தோஷத்தினை அழித்து துயரந்தான் வேண்டும் என்று சபதம் கொண்டு வாழப்போவதும் எம் கையில்தான் உண்டு.
துக்கம் நீங்க, துயரம் விலக, அன்பை விதைப்போம். இதைத்தான் படைத்தவனும் விரும்புவான். மனிதன் ஒருவன் சந்தோஷமாக இருப்பதனை மற்ற மனிதன் ஒருவன் விரும்ப மாட்டான் – ஆனால், இறைவன் விரும்புவான் – மேலும், மேலும் இன்பத்தினை எம் மேல் பொழிவான்.
ஒருவரை நீங்கள் அன்பு செய்ய வேண்டுமென்று உங்கள் மனதிற்கு தென்பட்டால், அல்லது உணர்ந்தால், அதனை உடனே செய்யுங்கள். ஒருக்காலும் பின் போடாதீங்கள். ஏனென்றால், மனித மனமல்லாவா எங்களிடம் உள்ளது – அது மாறிவிட எவ்வளவு கணம் தேவை என்று நினைக்கிறீங்கள்?
வார்த்தைகள் முக்கியம் – அவை வாழ வைக்க வேண்டும். ஒருவரின் வாழ்க்கையினை மாயை ஆக்கக் கூடாது.
சிந்திக்க வேண்டும், தீயன மனதினுள் வந்திரவே கூடாதென்று.
எமது இந்த Healthy Life Hacks Channelஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்களை அனைவரையும் Healthy Life Hacks Channel லினில் சந்திக்கின்றேன்.
நன்றி
வணக்கம்