“அரசாங்க அலுவலகங்களை கையளிப்பது ஜனநாயகத்துக்கு சிறந்த முன்மாதிரி” – அசாத் சாலி!

மக்கள் போராட்டம் வெற்றியளித்து வரும் நிலையில், ஆட்சி மாற்றத்துக்கு இடமளிக்கும் வகையில் போராட்டக்காரர்கள் நடந்துகொள்வதுடன், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக நடைமுறைகளுக்கு மதிப்பளித்து நடந்துகொள்ள வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஊழல்வாதிகளை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டம் வெற்றியின் இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில், வெற்றியின் அடையாளங்களாக ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பிரதமரின் அலுவலகம் என்பவை வெற்றியாளர்களின் வசம் வந்துள்ளன.

ஜனாதிபதி நாட்டை விட்டுச் சென்றுள்ளதால் ஏற்பட்ட வெற்றிடம் அரசியலமைப்பின் பிரகாரமே நிரப்பப்பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை பதில் ஜனாதிபதி செய்யும் வகையில் இடமளிக்கப்படல் அவசியம். இதற்காகவே மக்கள் போராட்ட சக்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் இவ்விடங்களை ஒப்படைத்துவிட்டு வெளியேற முன்வந்துள்ளனர். இதுதான், நாட்டில் இடம் பெறுபவை ஜனநாயகப் போராட்டம் என்பதற்கான அர்த்தத்தை கற்பிக்கும்.

சட்டத்தரணிகள் சங்கம், சபாநாயகர் மற்றும் ஓபித தேரரும் இவ்விடங்களை ஒப்படைக்கும்படியே கோருகின்றனர். மாறாக ஒரு சில கட்சிகளின் ஒற்றைப் பிடிவாதங்களுக்கு இடமளிப்பது, அவர்களது அதிகார ஆசைகளை குறுக்கு வழியில் அடையும் வழிகளைத் திறந்துவிடலாம். இவ்வாறு நிகழ்ந்தால் மக்கள் போராட்டம் மலினமடையலாம்.

எனவே, ஜனநாயக செயற்பாடுகளுக்கு இடமளித்தும், இந்தக் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்தும் கைப்பற்றப்பட்ட அரசாங்க அலுவலகங்களை கையளிக்குமாறு தேசிய ஐக்கிய முன்னணி கேட்டுக் கொள்ளவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அரசாங்க அலுவலகங்களை கையளிப்பது ஜனநாயகத்துக்கு சிறந்த முன்மாதிரி” – அசாத் சாலி!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More