ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி - முன்னாள் முதல்வர் சிராஸ்

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி - முன்னாள் முதல்வர் சிராஸ்

குரோதம், வெறுப்புணர்வு, பிரதேசவாதம், பகைமை நீங்கி அன்பு, அரவணைப்பு மிகைக்கும் சூழ்நிலை உருவாக ஈகைத் திருநாளில் பிரார்த்திப்போம் என்று கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். இத்தியாகத் திருநாளில் மக்கள் மத்தியில் சாந்தி, சமாதானம், சௌபாக்கியம் ஏற்பட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக.

புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் நாம் துல்ஹஜ் மாதத்தின் சிறப்பையும் அல்லாஹ்வின் வல்லமையையும் நபி இப்றாஹிம் (அலை) அவர்களின் தியாகத்தையும் அது எமக்கு கற்றுத்தருகின்ற மானுட விழுமியங்களையும் நமது வாழ்வியலில் உயிர்ப்பித்து இம்மையிலும், மறுமையிலும் விமோசனம் பெற முயற்சிப்போம்.

இன்று எமது நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக சொல்லொன்னாத் துயரத்தோடு தமது அன்றாட ஜீவியத்தை நடாத்திச் செல்வதில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலைமை முற்றாக நீங்க இத்தியாகத் திருநாளில் இறைவனிடம் இருகரம் ஏந்தி பிராத்திப்போமாக.

அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் நாடி நிற்கும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மீண்டும் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்துத்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஈத்முபாறக்

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி - முன்னாள் முதல்வர் சிராஸ்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More