ஹக்கீம் நேரில் அனுதாபம்

இலங்கையில், களுத்துறை மாவட்டத்தில்,அட்டுலுகம பிரதேசத்தில் பரிதாபகரமாகப் படுகொலை செய்யப்பட்ட 9 வயதுச் சிறுமி பாத்திமா ஆயிஷாவின் வீட்டிற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ,ஞாயிற்றுக்கிழமை(29), சென்று நடந்தவற்றை நேரில் கேட்டறிந்ததோடு, அனுதாபம் தெரிவித்தார்.

அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், சிறுமியின் கொடூரக் கொலை விடயத்தில் சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, நீதியைப் பெற்றுக்கொடுக்க உதவுமாறு பொலிஸ் அதிகாரிகளிடம் கேட்டுகொண்டார்.

அதன்போது, ஓரிரு நாட்களில் குற்றவாளிகளைக் கைதுசெய்ய முடியுமென பண்டாரகம பிரதான பொலிஸ் பரிசோதகர் ராஜபக்‌ஷ, அவரிடம் நம்பிக்கை தெரிவித்திருந்தார். நீதவான் நீதிமன்ற உத்தரவின்பேரில் சட்ட வைத்திய அதிகாரிகள் மூவரடங்கிய குழுவினரால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுபற்றியும் கூறப்பட்டது.

பண்டாரகம பிரதேசபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் நப்லி நஸீர் மற்றும் களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். அஸ்லம் ஆகியோரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுடன் அங்கு சென்றிருந்தனர்.

பிந்திய செய்திகளின்படி, பிரஸ்தாப கொலைச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹக்கீம் நேரில் அனுதாபம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY