
posted 15th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஹக்கீமிடம் கேள்விகள் முன்வைக்கும் மஜீத் மௌலவி
இருபத்தி மூன்று வருடங்களாக கிழக்கு முஸ்லிம்களின் அதிக வாக்குககள் பெற்ற கட்சியின் தலைவர் என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் ஐக்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி பல கேள்விகளை முன் வைத்து அவருக்கு வட்சப் மூலம் செய்தி அனுப்பியுள்ளார்.
முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தனது செய்தில்,
.
கிழக்கு முஸ்லிம்களின் அதிக ஓட்டுப்பெற்ற கட்சியின் தலைவர் என்ற வகையில் உங்களிடம் சில கேள்விகளை கேட்கின்றேன். இவை இன்று நேற்றைய பிரச்சினைகள் அல்ல. மாறாக தங்களால் தீர்வு பெற்றுத்தராத நெடுங்கால பிரச்சினைகளாகும். அவையாவன;
1. வடக்கு கிழக்கு இணைப்பில் உங்களினதும் உங்கள் கட்சியினதும் நிலைப்பாடு என்ன?
2. கல்முனை ஒரே பிரதேச செயலகமா இருக்க வேண்டுமா? அல்லது உப செயலகத்தை அப்படியே தனி செயலகமாக மாற்ற முடியும் என்ற நிலைப்பாடா?
3. சாய்ந்தமருது சபை விடயத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?
4. கல்முனையை மூன்றாக அல்லது நான்காக பிரிக்க வேண்டும் என்பதை நீங்கள் கெபினட் அமைச்சராக இருந்த போது மிக இலகுவாக செய்திருக்கலாம். அவ்வாறு செய்யாமைக்கான காரணம் என்ன?
5. கல்முனை கரையோர மாவட்டம் அல்லது கல்முனை தேர்தல் மாவட்டம் போன்றவற்றை அனைத்து அரசாங்கங்களுக்கும் முட்டுக்கொடுத்து பதவி பெற்றும் உங்களால் பெற்றுத்தர முடியாமைக்கான காரணம் என்ன?
6. தோப்பூர் பிரதேச செயலக பிரச்சினையை தீர்க்க முடியாமல் போனது ஏன்?
7. முன்னாள அமைச்சர் பேரியல் அஷ்ரப் கொண்டு வந்த சுனாமி வீட்டுத் திட்டத்தை நீங்கள் மஹிந்த ராஜபக்ஷ, ரணில், மைத்திரி அரசுகளில் பெரும் அதிகாரம் கொண்ட அமைச்சராக இருந்தும் அதனை பெற்றுக்கொடுக்காமைக்கான காரணம் என்ன?

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)