
posted 11th June 2023
உங்கள் உறவுகளின் துயர் பகிருங்கள் - Share your grief of loved ones
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள் - Share your bereavement
வைத்தியசாலையை அழகுப்படுத்திய நானாட்டான் முச்சக்கர வண்டி சங்கம்
மன்னார் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் சிரமதானப் பணியில் ஈடுபட்டதுடன் சுற்று மதில்களுக்கு வருணம் பூசி அழகு படுத்தும் செயல்பாட்டில் நானாட்டான் முச்சக்கர வண்டி உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.
இச்செயற்பாடு சனிக்கிழமை (10) காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இடம்பெற்றது.
இந்த சிரமதானப் பணிக்கான அனுசரனையை நானாட்டான் வர்த்தகர் சிலர் வழங்கியதைத் தொடர்ந்து நானாட்டான் முச்சக்கர வண்டி சங்கத்தின் நிர்வாகத்தினரும், உறுப்பினர்களும் சிரமதானப் பணியை முன்னெடுத்தனர்.
குறித்த இச் செயல்பாட்டை பொதுமக்களும், வைத்தியசாலை நிர்வாகத்தினரும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)