
posted 22nd May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வைகாசி சடங்கில் அதிகாலை முதல் நேர்த்திக்கடன்
கிழக்கில் கண்ணகித்தாயின் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கின்போது பக்தர்கள் அதிகாலை முதல் கற்பூரச்சட்டி ஏந்தி பயபக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
அதேவேளை ஆண்கள் அங்கப் பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயவருடாந்த வைகாசித் திங்கள் திருக்குளிர்த்தி பாடும் முக்கிய சடங்கு இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெறும்.
எட்டாம் சடங்கு எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வுகள் அனைத்தும் பண்டைய கலாசார பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)