வீதி விபத்தில்  படுகாயமும் உயிரிழப்பும்

வீதி விபத்தில் படுகாயமும் உயிரிழப்பும்

வடமராட்சியில் மந்திகைக்கும் மாலிசந்திக்கும் இடையே பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது;

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியும் அதற்கு எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் முச்சக்கரவண்டி தடம்புரண்டதில் அதில் பயணித்த ஐவரும், தனது இரு பிள்ளைகளையும் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற தந்தையும் படுகாயங்களுக்கு இலக்காகினர்.

இதேவேளை கொடிகாம் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் முதியவர் உயிரிழந்தார்

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் இராணுவ வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

வவுனியா - நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியில் பாரதிபுரம் 50 வீட்டுத் திட்ட சந்திக்கு அண்மையில் உள்ள தம்பனைப் புளியங்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது,

வவுனியா- நெளுக்குளம் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற பெண் ஒருவரின் மோட்டர் சைக்கிள் ஒன்று பாரதிபுரம் 50 வீட்டுதிட்ட சந்திக்கு அண்மித்த தம்பனை புளியங்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த முதியவர் ஒருவரின் மோட்டர் சைகிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முதியவர் வீதியில் விழுந்துள்ளார். அந்தச் சமயம் பின்னால் வந்த இராணுவ வாகனம் ஒன்று முதியவரின் தலையில் ஏறியுள்ளது. இதில் முதியவர் தலை நசுங்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆனால், முதியவரின் மரணத்துக்குக் காரணமானது என்று கூறப்படும் இராணுவ வாகனம் அந்த இடத்தில் நிற்காது உடனேயே அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் வவுனியா, விநாயகபுரத்தைச் சேர்ந்த தர்மராஜா (வயது 64) என்பவரே உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீதி விபத்தில்  படுகாயமும் உயிரிழப்பும்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House