விஷமச் சக்திகள்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

விஷமச் சக்திகள்

திறமைகளை வெளிக்காட்டுகின்றபோது, விஷமச் சக்திகள் செயல்படுகின்றன உமாரா சிங்ஹவங்ச போன்றோர் பழிவாங்கப்படுவதாக ஹக்கீம் விசனம்

முஸ்லிம் சமூகத்தில் சிங்கள மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள் ஏதோ ஒரு வகையில் தமது திறமைகளை வெளிக்காட்டுகின்றபோது, அவர்களுக்கு எதிராகவும் விஷமச் சக்திகள் செயல்பட்டு கொண்டிருப்பதாகத் தோன்றுகின்றது.

இவ்வாறு, கவிமணி நஜ்முல் ஹுசைன் அவர்களின் "வேறாகா வேர்கள்" சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு அல்ஹிதாயா கல்லூரியில் நடைபெற்ற போது, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அது தொடர்பில், மு.கா. தலைவர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,

அண்மை காலமாக இங்கு நடக்கின்ற விடயங்களை நாம் பார்க்கின்ற போது, ஒரு சில விடயங்களை தொட்டு சொல்ல வேண்டும் என்று தோன்றுகின்றது. சிங்கள மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள் ஏதோ ஒரு வகையில் தமது திறமைகளை காட்டுகின்ற நிலையில், ஏதோ விஷமச் சக்திகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றனவோ என்று எனக்கு எண்ணத் தோன்றுகின்றது.

நான் எதை சொல்ல வருகின்றேன் என்றால், எமது சமூகத்தில் இருக்கின்ற மிகச் சிறந்த சிங்கள பாடகி உமாரா சிங்ஹவங்சவை பெரிய சர்ச்சைக்குள்ளே கொண்டு போய் மாட்டி விட்டிருக்கின்றார்கள். அவர் ஒரு முஸ்லிம், மலாய் பெண், நான் அவரது பாடல்களை நிறைய கேட்டிருக்கின்றேன்.

சிங்கள உலகில், மிகச் சிறந்த பாடகரான பண்டிட் டபிள்யூ.டி. அமரதேவ பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. "ஹந்தானே சிஹினய" என்ற பாடலில் அவரோடு சேர்ந்து பாடிய ஒரு திறமையான பாடகிதான் உமாரா சிங்ஹவங்ச. அவர் தேசிய கீதத்தை தவறாக உச்சரித்து விட்டார் என்று பெரிய புரளியை கிழப்பி, விசாரணை என்று அழைத்து கொண்டிருக்கின்றார்கள்.

அவரே, "நான் ஏதும் தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள் " என்று சொல்லியும்கூட விடாமல், இப்போது பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் அவருக்கு ஒரு பெரிய விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது.

பத்திரிகைகளில் இதைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். கொரோனா காலத்தில் முஸ்லிம்களை பழி வாங்கிய சில ஊடகங்கள் இருக்கின்றன. அந்த ஊடகங்கள் இப்போது இதற்கு பிரசித்தம் கொடுக்கின்றார்கள். அதாவது, எமது சமூகததில் இருக்கின்ற திறமையானவர்களை வித்தியாசமான போக்கில் பழி வாங்குகின்றார்கள். நான் தேசிய கீத விடயத்தில் பிழை காண வில்லை. அவர் “மாதா” என்பதை “மஹதா” என்று உச்சரித்து விட்டதாகதான் சொல்கின்றார்கள்.

உதாரணமாக இந்திய தேசிய கீதத்தை ஏ.ஆர். ரஹ்மான் எவ்வளவு உச்சத்திற்கு கொண்டு போய் இருக்கிறார் என்றால், அதில் யாரும் பிழையை காண முடியாது.

உமாரா சிங்ஹவங்ச ஒரு முஸ்லிம் பெண் என்பதை அதிகமானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதற்காகத்தான் இவர் பழி வாங்கப்படுகின்றாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இந்தச் செய்தி போய்ச் சேர வேண்டும். அவர் சார்பாக யாராவது பேச வேண்டும்.

இன்று தேசிய கீதத்தை தமிழில் பாடினாலும் பெரிய குற்றமாகவே பார்க்கின்றார்கள். இதனால் நான் வலிந்து தமிழ் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் தேசிய கீதத்தை தமிழில் பாடுங்கள் என்று கூறியிருக்கின்றேன்.

எங்களது அரசியல் அமைப்பில் தமிழிலும் தேசிய கீதம் இருக்கிறது. அதற்கான இசையை தமழிலேயயே அமைத்தும் கொடுத்திருக்கின்றார்கள்.

நாங்கள் சிங்கள மொழியில் பற்றில்லாதவர்கள் அல்லர். அதை நாங்கள் இந்த சபையிலேயே பார்க்கலாம்.

டாக்டர் ஷாபியை இம்சைப்படுத்திய கூட்டம்தான் இதற்கு பின்னாலும் இருக்கின்றது என்பதுதான் என்னுடைய அனுமானம்.

நான் உயர் கல்வி அமைச்சராக இருந்த போது, மருத்துவ சங்கத்தின் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது, மகப்பேற்று, பெண்ணோயியல் மருத்துவ நிபுணர்களுடைய சங்கம் ஒன்று இருக்கின்றது. அவர்களிடத்தில் "இப்படியாக இன ரீதியாக பழி வாங்குகின்ற சந்தர்ப்பங்களில் உங்களது சங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது? ஏன் இதைப் பற்றி பேசாமல் இருக்கின்றீர்கள்? இது தவறு இல்லையா?" என்று நேரடியாக அவர்களிடத்தில் நான் கேட்டேன்.

எங்களது சமூகத்தை சேர்ந்த புகழ்பூத்த மகப் பேற்று மருத்துவ நிபுணர்கள் இருக்கின்றார்கள். அவர்களை வீட்டுக்கு அழைத்து கலந்துரையாடினேன். அவ்வாறான விவகாரம் சம்பந்தமாக ஒரு சர்ச்சை எழுவதற்கு காரணமே இல்லை என்றார்கள்.

ஏறத்தாழ பத்துப் பேர் சூழ்ந்திருக்கின்ற நேரத்தில் அப்படி ஒரு வைத்தியர் செய்யவே முடியாது. அதுவும் 900 பேரை மலடாக்குவது சாத்தியமே இல்லை என்பதற்கு நிறைய விடயங்களைக் கூறினார்கள். ஆனால், வேண்டுமென்றே இப்படி ஒரு புரளியைக் கிழப்ப வேண்டும் என்றே செய்யப்படுகின்றது. ஆனால், மகப்பேற்று மருத்துவ நிபுணர்களுடைய சங்கம் வாய் திறக்கவே இல்லை.

இன்று உமாரா சிங்கவங்சவுக்கு ஆதரவாக யாருமே வாய் திறக்கவில்லை. இந்த நாட்டில் தேவையற்ற புரளிகளைக் கிழப்பி அதனூடாக வேற்றுமைகளை பெரிதுபடுத்திக் கொண்டு போகின்றவர்கள் மத்தியில் நாம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

"அரங்கலை"க்கு பிறகு இவை எல்லாம் அகன்று போகும் என்று நாம் நினைத்திருந்தோம். ஆனால், அது மீண்டும் முளை விட ஆரம்பித்திருக்கின்றது என்ற கவலையை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

விஷமச் சக்திகள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)