
posted 14th January 2023
சம்மாந்துறை பிரதேச செயலக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடையே விளையாட்டு நிகழ்வுகள் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முகம்மது ஹனிபா அவர்களின் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம், கணக்காளர் ஐ.எம். பாரிஸ், மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.கே. ரினோஷா, நிருவாக உத்தியோகத்தர் கே.பீ. சலீம், கிராம நிலதாரி, நிருவாக உத்தியோகத்தர் எம்.எல். தாசீம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)