
posted 2nd May 2022
யாழ்ப்பாணம் வல்வை சந்திக்கு அருகில் கப் ரக வாகனம் ஒன்று தடம் புரண்டுள்ளது.
பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதுவதைத் தவிர்க்கும் நோக்கில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கப் ரக வாகனம் எதிரில் இருந்த மரத்துடன் மோதுண்டு தடம் புரண்டுள்ளது.
இந்த விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் எதிரில் வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவர்கள் இரண்டு கைகளையும் விட்டு சாகசம் செய்ய முற்பட்டதன் காரணமாகவே குறித்த விபத்து நிகழ்ந்ததாகவும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY