
posted 4th April 2022
ஹைஏஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வவுனியா மன்னார் வீதியில் பட்டானிச்சூர் பகுதியில் சனிக்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதி ஓரமாக நின்ற ஹைஏஸ் வாகனம் பிரதான வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஹைஏஸ் வாகனத்துடன் மோதியது.
இதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய