வித்தியாரம்ப விழா

நிந்தவூர் பிரதேச சபையினுடைய பராமரிப்பின் கீழுள்ள அல்- ஹிக்மா பாலர் பாடசாலையின் 2022 ஆம் ஆண்டிற்கான கல்விசார் நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கும் வகையில் வித்தியாரம்ப விழா 02.03.2022 அன்று நடைபெற்றது.

நிந்தவூர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர், விஷேட அதிதிகளாக கல்முனை கல்வி வலய முன்பள்ளி கல்விகள உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஐ.எல். முஹம்மது அனீஸ், நிந்தவூர் பிரதேச செயலகத்தின் ஆரம்ப குழந்தைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல். முஹம்மது ஹப்ரத், நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

சுமார் 25ற்கும் மேற்பட்ட புதிய மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்றதுடன் அவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் கலந்து கொண்ட பிரமுகர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த பாலர் பாடசாலைக்கான நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் உள்ளுராட்சி மன்றங்களின் உள்ளூர் மேம்பாட்டு (Local Development Support Project- LDSP) திட்டத்தினூடாக நிர்மாணிக்கப்பட்டு கடந்த 22.02.2022 அன்று கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆனையாளர் என். மணிவண்ணன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வித்தியாரம்ப விழா

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House