விசுவமடுவில் இருந்து காலி முகத்திடல் நோக்கி பயணித்த ஜனகவர்மன்

காலி முகத்திடலில் இடம்பெறும் கோட்டா கோ கம எனும் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக இன்று (20) விசுவமடு சந்தியில் இருந்து 32 வயதையுடைய இராசரத்தினம் ஜனகவர்மன் என்பவர் காலிமுகத்திடலை நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

நாட்டு மக்களின் நலன் கருதியும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும் குறித்த பயணம் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். இன்று வவுனியா சென்று வவுனியாவில் ஓய்வு பெற்று பின் நாளை மீண்டும் பயணத்தை மேற்கொள்வதாகவும் நான்கு நாள் பயணமாக குறித்த பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் மக்களின் முழு ஆதரவுடனும் இன்று 9.00மணியளவில் புறப்பட்டார் . மூவின மக்களும் பொலிசாரும் தமது பாதுகாப்பை உறுதிபடுத்துமாறும் தெரிவித்துள்ளார்.

விசுவமடுவில் இருந்து காலி முகத்திடல் நோக்கி பயணித்த ஜனகவர்மன்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY