
posted 6th May 2022
மக்கள் விடுதலை முன்னணியினரின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை தினம் விசுவமடு பகுதியில் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி முல்லைத்தீவு எல்லை பகுதியான விசவமடு சந்தியில் குறித்த போராட்டம் காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் மோகன் தலைமையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)