
posted 18th January 2023
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன் மீது கடும் அதிருப்தி வெளியிட்டு கூட்டணியிலிருந்து வெளியேறிய அனந்தி சசிதரன் மீண்டும் அந்தக் கட்சியிலேயே இணைந்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள தமிழ் மக்கள் கூட்டணி பேச்சு நடத்தியது. எனினும், பின்னர் கூட்டமைப்புடன் சேராமல் அந்தக் கட்சி வெளியேறியது.
இந்நிலையில், தனித்து தேர்தலை சந்திக்கத் தயாராகி வரும் நிலையில் தமிழ் மக்கள் கூட்டணியுடன் மீண்டும் அனந்தி சசிதரன் கூட்டு சேர்ந்துள்ளார். இது அந்தக் கட்சியின் வட்டாரங்கள் மூலம் அறிய வந்தது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)