வாள் வெட்டுக்கிலக்காகி ஒருவர் பலி மூவர் படுகாயம்

வாள் வெட்டுக்கிலக்காகி ஒருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (12) இரவு 9 மணியளவில் உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மரணவீடு ஒன்றில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு இந்த சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளது.

15 க்கு மேற்பட்டவர்களைக் கொண்ட குழு வாளினால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதன்போது படுகாயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும், தாக்குதல் மேற்கொண்ட குறித்த குழுவை

சேர்ந்த ஒருவருமாக நால்வர் நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் உயிரிழந்துடன் மேலும் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை மற்றய நபர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்ப பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் சிவநகர் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சண்முகசுந்தரம் யசோதரன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தை நீதவான் பார்வையிட்டார்.

வாள் வெட்டுக்கிலக்காகி ஒருவர் பலி மூவர் படுகாயம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More