
posted 12th November 2022
கனகாம்பிகை குளம் வான் பாய்கின்றமையால் இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கனகாம்பிகை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளது.
கனகாம்பிகை குளத்தின் 10 அடி 6 அங்குலம் கொள்வனவு கொண்ட குளமானது தற்போது 10 அடி 11.5 அங்குலம் காணப்படுகின்றமையால் தற்போது வான் பாய ஆரம்பித்துள்ளமையால் இதனால் தாழ்வுபாடுகளில் உள்ள மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)