வழங்கப்படும் அறிவுரையை பின்பற்றி விவசாயிகள் செயல்படும்போது சிறந்த பலனை பெற முடியும் - விவசாய பணிப்பாளர் சகிலா பானு
வழங்கப்படும் அறிவுரையை பின்பற்றி விவசாயிகள் செயல்படும்போது சிறந்த பலனை பெற முடியும் - விவசாய பணிப்பாளர் சகிலா பானு

மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் சகிலா பானு

மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது விவசாயிகள் காலபோக நெற் செய்கைக்கான விதைப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளதால் சேதனப் பசளையை குறிப்பிடப்படும் முறையில் நடைமுறைப் படுத்தும்போது நெற் செய்கையானது சிறந்த பலனை கொடுக்கும் என மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் சகிலா பானு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்பொழுது மன்னார் மாவட்டத்ததை பொறுத்தமட்டில் மன்னார் மாவட்ட விவசாயிகள் நடப்பு வருட காலபோக நெற் செய்கையில் விதைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

இந்த வகையில் மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் சகிலா பானு மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கும் ஆலோசனையாக தெரிவிக்கையில்

மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது 2021-2022 காலபோகத்துக்கான நெற்செய்கைக்கான விதைப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

தற்பொழுது இக்காலத்தில் மேற்கொள்ளப்படும் விவசாய செய்கையானது சேதனப் பசளை தொடர்பாக பேசப்பட்டு வருகின்றது.

இந்த நேரத்தில் இப்பகுதி விவசாயிகளுக்கு மேலும் சில அறிவுரை கூற வேண்டிய கடற்பாடும் எமக்கு உண்டு.

அடிக்கட்டு பசளையாக மிகவும் கூடிய போசனை கொண்ட கூட்டெறு ஒரு ஏக்கருக்கு 500 கிலோ கிராம் இட வேண்டும்.

இத்துடன் நெல் முளைத்து வரும் காலங்களிலே திரவ உயிரியல் பசளைகளை விவசாயிகள் வீட்டிலே தயாரித்து பாவிக்க வேண்டும்.

அதாவது முருங்கை இலை போன்ற உயிரியல் பசளைகளைக் கொண்டு தயாரித்து விவசாயிகள் ஆரம்பத்திலே தங்கள் வயல்களில் பாவிக்க வேண்டும்.

இப்படியான திரவ உயிரியல் பசளை பாவனைகள் தொடர்பாக விவசாயிகள் உங்கள் பகுதிகளிலுள்ள விவசாய போதனாசிரியர்கள் மூலம் இதனுடைய செயற்பாடுகளை விவசாயிகள் அறிந்துகொள்ள முடியும்.

அத்துடன் விதைத்து அல்லது நாற்று செய்யப்பட்டு இரண்டு கிழமைகளுக்குப் பின்னர் தற்பொழுது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த நனோ நைதரசன் பசளையை 500 மில்லி லீற்றர் ஒரு ஏக்கருக்கு தெளிக்க வேண்டிய நிலைப்பாடு இருக்கின்றது.

இவற்றுடன் சேர்த்து கூட்டெறுவும் வயலுக்கு இடப்பட வேண்டும். இந்த 500 மில்லி லீற்றர் நனோ நைதரசனை ஒரு முறை 14 லீற்றருக்கு 50 மில்லி லீற்றர் இந்த நைதரசனை தண்ணீரில் கலந்து பத்து தரம் ஒரு ஏக்கருக்கு இவ்வாறு தெளிக்க வேண்டும்.

இதன் பின் நாற்று நட்டப்பட்டோ அல்லது விதைப்பு செய்யப்பட்டோ நான்கு கிழமைகளுக்கு பின்பு மேலதிகமாக பொற்றாசியம் குளோரைட் 25 கிலோ கிராம் வயலுக்கு இடப்பட வேண்டும்.

இந்த பொட்டாசியம் குளோரைட்டுடன் ஏற்கனவே கூறப்பட்ட அளவின்படி இந்த நனோ நைதரசனையை சேர்த்து தெளிக்க வேண்டும்.

இத்துடன் விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு கூட்டெறு இட்டு வருவதும் அவசியமானது.

பின் ஆறாவது கிழமைகளிலும் இந்த பொட்டாசியம் குளோரைட்டை ஒரு லீற்றர் நீருக்கு 35 கிலோ கிராம் மண்ணிலே இடுவதுடன் ஏற்கனவே குறிப்பிட்ட மாதிரி நனோ நைதரசனையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் எட்டாவது கிழமையிலே விவசாயிகள் பயிர் நிறத்தினை இலை வர்ண சுட்டி என்பதையும் பார்வையிட்டு அதற்கேற்றவாறு நனோ நைதரசனையை இட வேண்டும்.

இந்த இலை வர்ண சுட்டியானது தொழில் நுட்பத்துக்கு உட்படுவதால் விவசாய போதனாசிரியர்களை விவசாயிகள் கலந்து ஆலோசிக்க வேண்டும். அதற்கான வழிவகைகளை அவர் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்துவார்.

இந்த நனோ நைதரசன் திரவ பசளையை சூரியன் உதயமாவதற்கு முன் அதாவது காலை 8 மணிக்கு முன்பதாக அல்லது மாலை 5 மணிக்கு பிற்பாடு வயலுக்கு தெளிப்பதன் மூலம் சிறந்த நண்மையை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நனோ திரவ பசளையை பாவிப்பதற்கு முன் நன்கு போத்தலை குழுக்கிய பின்பே பாவிக்க வேண்டும். அத்துடன் இப் பசளை திரவ போத்தலை உலர்ந்த இடத்திலே களஞ்சியப்படுத்தி வைத்திருப்பது நலமாகும் என இவ்வாறு தெரிவித்தார்.

வழங்கப்படும் அறிவுரையை பின்பற்றி விவசாயிகள் செயல்படும்போது சிறந்த பலனை பெற முடியும் - விவசாய பணிப்பாளர் சகிலா பானு

வாஸ் கூஞ்ஞ

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 08.09.2025

Varisu - வாரிசு - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 06.09.2025

Varisu - வாரிசு - 06.09.2025

Read More
Mahanadhi - மகாநதி - 05.09.2025

Mahanadhi - மகாநதி - 05.09.2025

Read More