
posted 30th May 2022
வன்கொடுமைக்கு உட்படுத்தப்படும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நீதிகோரி வடகிழக்குப் பெண்கள் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் நீதிக்கான போராட்டம்' மன்னாரிலும் இடம்பெருகின்றது
சிறுமியின் இழப்பிற்கு நீதி கோரி செவ்வாய் கிழமை (2022.05.31) காலை 10 மணிக்கு வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான போராட்டம் இடம் பெறுவற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பெண்கள் வலையமைப்பினர் சமூக ஆர்வலர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றினைந்து தொடர்சியாக நாட்டில் இடம் பெறும் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும் அவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்படும் பெண்கள் சிறுவர்களுக்கு விரைவில் நீதி நிலை நாட்டபடவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி 8 மாவட்டங்களில் இப் போராட்டம் நடைபெற இருக்கின்றது.
இதற்கமைய வடபகுதியில் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் குறித்த போராட்டம் செவ்வாய்க்கிழமை (31) காலை இடம்பெற இருக்கின்றது
குறித்த போராட்டத்தில் யாவரும் கலந்து கொண்டு பெண்கள் அனைவருக்குமான எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க ஒன்றினையுமாறு பெண்கள் ஒன்றியம் கோரிக்கை விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இ நிகழ்வு செவ்வாய்க்கிழமை (31.05.2022) காலை 10.00 மணிக்கு வடபகுதிகளில் நடைபெற இருக்கும் இடம்பெறும் இடங்கள்.
மன்னார் - மாவட்ட செயலகம் முன்பாகவும்,
கிளிநொச்சி - பழைய மாவட்ட செயலகம் முன்பாகவும்,
முல்லைதீவு - மாவட்ட செயலகத்தின் முன்பாகவும்,
யாழ்பாணம் - ஆளுனர் காரியாலயம் முன்பாகவும்,
வவுனியா - புதிய பஸ் நிலையம் முன்பாகவும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY