
posted 10th December 2021
இலங்கையில் வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அட்மிரல் ஒப் த பீல்ட் மார்ஷல் வசந்த கரன்னாகொட அவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வியாழக்கிழமை (09) பதவிப்பிரமாணம் செய்தார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கைகளின் போது கடற்படைத் தளபதியாக விளங்கிய வசந்த கரன்னாகொட அவர்கள், தாய்நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவராவார். அத்துடன், ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவராகவும் அவர் சேவையாற்றியுள்ளார்.
வடமேல் மாகாண ஆளுநராகவிருந்த ராஜா கொல்லுரே அவர்களின் மறைவை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கே, வடமேல் மாகாணப் புதிய ஆளுநர் பதவிக்கு வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
எனினும், 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தது.
இந்தநிலையிலேயே தற்போது கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னகொட வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House