
posted 14th January 2023
வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மக்களின் தேவைகளை அறிந்து விரைந்து செயல்படக் கூடியவர் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க புகழாரம் சூட்டினார்.
வியாழக்கிழமை (12) யாழில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா தொழில் பயிற்சி நிலையத்தின் செயல்பாடுகளை மீள ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கு ஆளுநர் வடக்கு மக்களின் உணர்வுகளையும், தேவைகளையும் நன்கு அறிந்து செயற்படுகிறார்.
வடக்கில் உள்ள இளைஞர், யுவதிகளின் எதிர்கால வழிகாட்டலுக்காக பல்வேறு துறை சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.
எமது அமைச்சின் கீழுள்ள தொழில் பயிற்சி நிலையங்களின் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.
வட மாகாணத்தில் இருக்கும் இளைஞர், யுவதிகளிடம் பல்வேறு திறமைகள் காணப்படுகின்ற நிலையில் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சலுகைகளை பயன்படுத்தி தமது திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

The Best Online Tutoring
மேலும் அங்கு தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்திலிருந்து தர்ஷினி தென்னிலங்கையில் சுதந்திக்கா இருவரும் பல்வேறு தடைகள் வந்த போதும் தமது அயராத முயற்சியினால் சாதனை படைத்தவர்கள்.
அவர்களைப் போன்று வடக்கு இளைஞர், யுவதிகளும் தமக்கு கிடைக்கின்ற சார்ப்பங்களை சரிவர பயன்படுத்தி தேசிய ரீதியிலும், சர்வதேச நீதியிலும் உயர்வு பெற வேண்டும் என்றார்.
ஆகவே அமைச்சர் என்ற வகையில் வட மாகாண இளைஞர், யுவதிகளுக்காக வட மாகாண ஆளுநர் முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எமது பங்களிப்புக்களை வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வட மாகாண பிரதமர் செயலாளர் சமன் பந்துல சேன, விளையாட்டு இளைஞர் விகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யார் மாவட்ட இளைஞர் சம்மேளன உதவிப் பணிப்பாளர் வினோதினி, பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)