
posted 25th October 2022
வாலிப பருவத்தில் குறிப்பாக வட மாகாணத்தில் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் சமூக சேவையிலிருந்து விலகியவர்களாக போதைக்கு அடிமையானதன் காரணமாகத்தான் ஏனைய கிராமங்கள் வாலிபர்களின் வாழ்க்கை திசை திரும்பியுள்ளது. எனவே சமூக பற்றோடும் கலாச்சார நோக்கமும் கொண்ட வாழிபர்களாக நாம் செயல்பட வேண்டும் என
இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழாவும் வாலிபத் தீபாவளி கொண்டாட்டமும் இத்துடன் 5ம் ஆண்டு புலமை பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பும் திங்கள் கிழமை (24.10.2022) புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிதி அமைச்சின் பொதுத் திறைச்சேரி மேலதிகப் பணிப்பாளர் நாயகம் எஸ்.யு.சந்திரகுமாரன் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
வருத்தப்படாத வாலிபர் இவ் சங்கமானது கடந்த இரு நிகழ்வுகளுக்கு என்னை அழைத்தபோது அந்நேரம் எனது கடமையின் நிமித்தம் நான் இவர்களின் அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்தேன்.
இருந்தும் இன்றைய இவர்களின் இவ் நிகழ்வில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இளவாலை என்பதின் விளக்கம் இளமை என்பதும் வாலைப் பருவம் என்பதும் வாலிபர்கள். அந்த காலத்திலேயே இவ்விடம் வாலிபர்களின் திடலாகவே அமந்துள்ளது என நினைக்கின்றேன்
அத்துடன் நீங்கள் வருத்தப்படாத வாலிபர்கள் சங்கமாக இருப்பதால் நீங்கள் என்றும் வருத்தப்படாத வாலிபர்களாக இருக்க வேண்டும் என ஆசீத்து நிற்கின்றேன்.
என்னுடைய நோக்கில் நேர்மறை எதிர்மறை என இரண்டு விடயங்கள் இருக்கின்றன.
இந்த இரண்டு விடயங்களையும் பேசிக்கொள்பவர்கள் எம்மத்தியில் இருக்கின்றார்கள்.
இங்கு தலைவர் தெரிவித்தார் தலையில் இடி விழுந்தாலும் நாங்கள் வருத்தப்பட மாட்டோம் என்று.
இதிலிருந்து எமக்கு விளங்கின்றது நீங்கள் ஒரு நேர்மறையான இளைஞர் சமூகமாக காணப்படுகின்றீர்கள். இதுதான நமக்குத் தேவை.
தமிழருக்கு கிடைக்க வேண்டியது நெஞ்சில் உறவும் உறுதியும் இருக்க வேண்டும். தமிழர்களை எத்தனை தடவை அழித்தார்கள் எத்தனை தடவை இடம்பெயர்ந்தார்கள். எத்தனை துன்பங்களை தாங்கினார்கள்.
வாலிபர்களின் வரலாறு என்பது மிகவும் முக்கிமானது. இந்த வருத்தப்படாத வாலிபர் சங்கமானது இளவாலைக்கு மாத்திரமல்ல இதன் நோக்கத்தை எதிர்காலத்தில் ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது.
வாலிப பருவத்தில் குறிப்பாக வட மாகாணத்தில் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் சமூக சேவையிலிருந்து விலகியவர்களாக போதைக்கு அடிமையானதன் காரணமாகத்தான் ஏனைய கிராமங்கள் வாலிபர்களின் வாழ்க்கை திசை திரும்பியுள்ளது.
எனவே சமூக பற்றோடும் கலாச்சார நோக்கமும் கொண்ட வாழிபர்களாக நாம் செயல்பட வேண்டும்.
இங்கு உங்கள் வருடாந்த அறிக்கையை கவனிக்கும்போது ஒரு திணைக்களத்தால் செய்ய முடியாததை மிகவும் நேர்த்தியாக செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றீர்கள்.
நீங்கள் சமூகப்பணி கலாச்சார பணி கல்விப் பணி ஆபத்துக்கு உதவுகின்ற பணி கொவிட் காலத்தில் ஒருவரையொருவர் சந்திக்க முடியாத நிலையிலும் நீங்கள் இவ்வாறு பல்வேறு பணிகளை செய்துள்ளீர்கள் செய்து வருகின்றீர்கள்.
ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய உங்கள் சிந்தனை ஏனையவர்களும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஆய்வுக்கு உட்படத்தப்பட வேண்டியது ஒன்றாகும்.
உங்கள் சங்கத்தின் கீதமும் உங்களுக்கு மறைமுகமான படிப்பிiனையை கொடுக்கும் ஒரு கீதமாக இருக்கின்றது.
உங்கள் முகநூலை நான் அடிக்கடி பார்க்கும்போது நீங்கள் இளவாலைக்கு மாத்திரம் கொண்டவர்கள் அல்ல மாறாக தமிழ் மக்களுக்கு ஏற்ற ஒரு சங்கமாக காணப்படுகின்றீர்கள்.
அதாவது நீங்கள் இளவாலைக்கு மாத்திரமல்ல வட பகுதி மற்றும் மலை நாட்டு மக்களுக்கும் உங்கள் உதவிக்கரம் நீட்டப்பட்டு வருவதை நான் மிகவும் உண்ணிப்பாக கவனித்துள்ளேன்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்பது ஒரு நகைச்சுவையின் பார்வைக்கு உள்ளானது.
நகைச்சுவையுடன் நாம் ஒரு காரியத்தைச் செய்யும்போது அங்கு மனத்திருப்தி காணப்படுகின்றது.
சமூகத்தில் ஒரு நல்ல தலைவராக வரவேண்டுமானால் அவர்களின் கிராமத்தில் இளைஞர்கள் நல்ல தலைமைத்தவத்தில் உருவாக வேண்டும்.
இங்கு உங்களை கவனிக்கும்போது ஒரு சீருடையுடன் பொறுப்புணர்வுடன் உங்களுக்குள்ளேயே ஒரு கட்டுக்கோப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்ததை நாங்கள் நோக்கிக் கொண்டிருந்தோம்.
புலம்பெயர்ந்து வாழும் மக்களால் எமக்கு நிதிக்கு பஞ்சம் இல்லை. ஆனால் கருத்துக்களுக்கும் செயல்பாடுகளுக்குமே பஞ்சம் காணப்படுகின்றது.
நாம் நேர்மையுடன் நல்ல தலைமைத்துவத்துடன் செயல்படும்போது நிதிகள் நம்மை தேடிவரும் என்பது ஐயம் இல்லை.
வட மாகாணத்தில் மாணவர்கள் போதை வஸ்துகளுக்கு அடிமைகளாகின்றனர் என செய்திகள் மூலம் அறிகின்றபோது திறமையுடன் செயல்படும் இளைஞர்களாகி நீங்கள் இவற்றையும் இனம் காணப்பட்டு தடுத்து நிறுத்த உங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் வேண்டி நிற்கின்றேன்.
சாதி சமயம் இனம் என்ற வேறுபாடுகளை கலைந்து அதற்கும் முன்னுறிமை வழங்கி வேறு மாவட்டங்களிலுள்ள பிற சமய இன இளைஞர்களை அழைத்து வந்து உறவை மேம்படுத்தவும் கோரி நிற்கின்றேன்.
இங்கு அழிந்து போகும் பாரம்பரிய நிகழ்வுகளை அழியாது இருக்க நீங்கள் முன்னெடுக்கின்றீர்கள் உண்மையில் உங்களை நாம் பாராட்ட வேண்டும்.
ஆகவே உங்கள் செயல்பாடு உங்கள் கிராமத்தில் அல்லது வட மாகாணத்தில் மட்டும் வரையறுக்காது தமிழ் பேசும் மக்கள் வாழும் இடங்களுக்கு எல்லாம் சென்றடைய வேண்டும் என்று கேட்டு நிற்கின்றேன்.
இவ் வாலிபர் சங்கத்தில் பெண்களும் அதிகம் இணைக்கப்பட்டு இன்னும் வளர்ச்சிப்பெறவும் வாழ்த்தி நிற்கின்றேன் என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)