றோட்டறிக் கழகத்தின் உதவியால் மன்னார் பொது வைத்தியசாலைக்கு தொடர்ச்சியாக இயங்கவைக்கப்பட்ட கதிரியக்கப் பிரிவு

மன்னார் பொது வைத்தியசாலையில் கதிரியக்கப் பிரிவு காணப்படுகின்றபோதும் அவற்றை சரியான முறையில் கையாள முடியாத நிலையை கண்டுணர்ந்த மன்னார் றோட்டறிக் கழகம் இக் கதிரியக்கப் பிரிவு தொடர்ச்சியாக இயங்குவதற்கான நிலையை உருவாக்கி கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பொது மாவட்ட வைத்தியசாலையில் கதிரியக்கப் பிரிவில் ஏறத்தாழ 5 கோடி பெறுமதியான கதிரியக்க மற்றும் ஆய்வுக்கான கருவிகள் காணப்பட்ட போதிலும் அவ்வறைக்குள் குளிரூட்டி வசதி இல்லாத காரணத்தினால் பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக சேவைகள் வழங்குவதில் பல சிரமங்கள் காணப்பட்டதராக தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இப் பிரிவு அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் முன்னுரிமைப்படுத்தலில் சேவைகள் வழங்கப்பட்டன. இதனால் வைத்தியசாலை நிர்வாகவும், பொது மக்களும் அதிக சிரமங்களை எதிர்கொண்டதாகவும் குறித்த இயந்திரத்திலிருந்து அதிக வெப்பம் வெளிவருவதால் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது பழுதடையக் கூடிய அபாயமும் காணப்பட்டதாகவும் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் மன்னார் றோட்டறிக் கழகத்தின் முயற்சியால் உடனடியாக 480,000 பெறுமதியாக குளிரூட்டி இயந்திரம் வழங்கப்பட்டதுடன், பொது மக்களுக்கான சேவையினை சிறப்பான முறையில் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

இதற்கான நிதியுதவிகள் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் கந்தையா அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தது என மன்னார் றோட்டறிக் கழகம் தெரிவித்திருந்தது.

றோட்டறிக் கழகத்தின் உதவியால் மன்னார் பொது வைத்தியசாலைக்கு தொடர்ச்சியாக இயங்கவைக்கப்பட்ட கதிரியக்கப் பிரிவு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY