
posted 19th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ரெலோவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ் நியமனம்
ரெலோவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தனது 11 மாநாட்டை நடாத்துவதற்கு முன் ஆயத்தமாக மாவட்ட நிர்வாகங்களை புதிப்பித்து வருகின்றது. அதற்கு அமைவாக யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகத் தெரிவுக் கூட்டம் யாழ்ப்பாண நகரப்பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட உறுப்பினர்கள், ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஐனா கருணாகரம், ஊடக பேச்சாளர் கு. சுரேந்திரன் உள்ளிட்ட தலைமைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிர்வாகத் தெரிவில் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவு செய்யப்பட்டார்.
அத்துடன் துணை மாவட்ட அமைப்பாளராக முன்னாள் யாழ்ப்பாண மாநகர துணை மேயர் து. ஈசன் தெரிவாகியதுடன் 37 பொதுக்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)