
posted 31st March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ரிக் ரோக் மூலம் எச்சரித்த இளைஞன் கைது
17 வயதேயான தனது மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயாரை வாளை காட்டி எச்சரித்தார் என்பதால் இளைஞர் ஒருவரையும் அவரின் நண்பரையும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இருவரும் ரிக் ரோக் செயலி மூலமாக காணொலி வழியாக இந்த எச்சரிக்கையை விடுத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
பாடசாலை ஒன்றில் கல்விகற்றுவரும் சிறுமியை அதே தரத்தில் கல்வி கற்றுவரும் சிறுவன் ஒருவன் காதலித்து வந்துள்ளார் என்று கூறப்படுகின்றது. இதனையறிந்த சிறுமியின் தாயார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 17 வயதுடைய காதலனும் அவனது நண்பனும் சேர்ந்து வாள் மற்றம் பஞ்ச சக்கரம் கொண்ட கூரிய ஆயுதத்துடன் படம் எடுத்து அதற்கேற்றால் போல் சில பாடல்களை பதிவு செய்து ரிக் ரோக்கில் பதிவிட்டு சிறுமியின் தாயாரை அச்சுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த பொலிஸார், பின்னர் அவர்களை கடுமையாக எச்சரித்து விடுதலை செய்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)