ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகும் நிலையை ஏற்படுத்த வேண்டும் - இரா.சாணக்கியன்

30 வருடகாலமாக அதிகார பேராசைக்காக காத்திருந்த ரணில் பதவி விலகுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது – இரா.சாணக்கியன்

30வருடகாலமாக அதிகார பேராசைக்காக காத்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் இன்று (வியாழக்கிழமை), இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “விசேடமாக போராட்டகாரர்கள் முன்வைத்துள்ள யோசனையில் முதலாம்,(கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகல்), இரண்டாம்(ரணில்-அமைச்சரவை பதவி விலகல்) யோசனைகளை செயற்படுத்தாமல் மூன்று மற்றும் நான்காவது விடயங்களை செயற்படுத்த முடியாது.

பொதுஜன பெரமுன கட்சிக்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள காரணத்தினால் எதிர்க்கட்சிக்கு எதனையும் செயற்படுத்த முடியாத நிலையில் போராட்டகாரர்களின் ஒன்றிணைவினால் ஜனாதிபதிக்கு பதவி விலக நேரிட்டுள்ளது.

கடந்த 30 வருடகாலமாக அதிகார பேராசைக்காக காத்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது.
ஆகவே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டால் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியுமா என்பது சந்தேகத்திற்குரியது. ஏனெனில், போராட்டத்தினால் லிபியாவில் ஸ்தீரமான அரசாங்கத்தை உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே ஜனாதிபதி பதவி விலகியதை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகாவிடின் அவர் பதில் ஜனாதிபதியாக பதவியேற்பார் அதனை தடுக்க முடியாது.

ஆகவே அவர் பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் போராட்டத்தில் ஈடுப்படுதற்கு முன்னர், அதனை தடுக்கும் வகையில் அனைவரும் ஒன்று திரள வேண்டும். ஏனெனில் இவர் வெட்கமற்ற நபர் என்பதை நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளேன்.

இவரது வீடு எரிக்கப்பட்டுள்ளமை கண்டனத்திற்குரியது. இருப்பினும் அச்சம்பவம் சந்தேகத்திற்குரியது. பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றால் பொதுஜன பெரமுனிற்கும் அது பிரச்சினையாக அமையும். அரசாங்கத்திற்குள் திருடர்கள் பலர் உள்ளார்கள்.

பொதுஜன பெரமுன தமது விருப்பத்திற்கமை பிரதமர், ஜனாதிபதி ஆகியோரை தெரிவு செய்ய கூடும், ஆகவே ஜனாதிபதி பதவி விலகலுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.

பதவியேற்றத்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்படுவது சாத்தியமற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக்கும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகும் நிலையை ஏற்படுத்த வேண்டும் - இரா.சாணக்கியன்

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More