
posted 12th May 2022
இலங்கையின் 26ஆவது பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நேற்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் பதவியேற்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்பாக பிரதமராகப் பொறுப்பேற்ற அவர், ஆறாவது தடவையாகப் இந்தப் பொறுப்புக்கு வந்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமைகளைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை பதவி விலகினார். இதைத் தொடர்ந்தே ரணில் விக்கிரமசிங்க பிரதமராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் ஜனாதிபதிக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை தொடர்ந்தே இந்த நியமனம் நடைபெற்றதாகத் தெரிய வருகின்றது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில், ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரேயொரு பாராளுமன்ற உறுப்புரிமையே தேசியப் பட்டியல் மூலம் கிடைத்தது. இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன், அடுத்த வாரத்துக்குள் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House