ரணிலுக்குச் சவாலான 8 கோரிக்கைகள்

காலி முகத்திடல் தன்னெழுச்சிப் போராட்ட, மக்கள் போராட்டத்தின் பிரதி நிதிகள் இடைக்கால அரசின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரம சிங்கவிடம் எட்டு கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

புதிய பிரதமர் மக்கள் சார்பிலான இக்கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன்படி….

1. ஜனாதிபதி பதவி விலக வேண்டும்.
2. அதிகபட்சம் 15 அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அரசு ஒன்று 18 மாதங்களுக்கு ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
3. அரசியலைப்பில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு 20 ஆம் திருத்தம் நீக்கப்படுவதுடன் 21 ஆம் திருத்தம் புதிதாகக் கொண்டு வரப்பட வேண்டும்.
4. பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்கும் வகையில் ஒரு நிவாரண வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதில் விளிம்பு நிலையிலுள்ள மக்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும்.
5. தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
6. நிதி ரீதியிலும் வேறுவகையிலும் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பில் வெளிப்படையான கண்காணிப்பு இருக்க வேண்டும்.
7. இலங்கை வாழ்பிரஜைகளின் அடிப்படை உரிமையான உயிர் வாழ்வதற்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.
8. சுதந்திரமான நீதியான தேர்தல்கள் உறுதி செய்யப்பட வேண்டாம்.

ஆகிய கோரிக்கைகள் புதிய பிரதமரிடம் தன்னெழுச்சிப் பேராட்டக்காரர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, காலி முகத்திடல் மைதானத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாமென பிரதமர் ரணில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணிலுக்குச் சவாலான 8 கோரிக்கைகள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now



ENJOY YOUR HOLIDAY