
posted 26th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
யாழ்ப்பாணம் குருநகர் புனித ஜேம்ஸ் ஆலய வருடாந்த திருவிழாவில் பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி
நேற்றைய தினம் (25) செவ்வாய் யாழ்ப்பாணம் குருநகர் புனித ஜேம்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற ஆலய திருவிழாவில் பாப்பரசர் பிரான்சிஸீன் இலங்கைக்கான பிரதிநிதி வண. கலாநிதி பிறாயன் ஊடக்கே பங்கேற்றிருந்தார்.
இவ்விழாவில் வடமாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம். சாஸ்ஸ் அவர்களும் கலந்துகொண்டார்.
வண. கலாநிதி பிறாயன் ஊடக்கே தனது சிறப்புரையை ஆற்றும்போது, வடமாகாண ஆளுநரை விழித்து தான் வருகை தந்த சந்தர்ப்பத்திலே அவர் இங்கே கலந்துகொண்டிருப்பது கத்தோலிக்க திருச்சபையும், அரசாங்கமும் இணைந்து பணியாற்றுவதற்கான ஓர் அடையாளமாக இருப்பதாக கூறினார்.
மேலும், தான் வடமாகாணம் பற்றியும், இந்த மக்கள் பற்றியும் நன்கு அறிந்திருப்பதாக கூறிய பாப்பரசரின் பிரதிநிதி இந்த மக்களின் அன்பு மிகவும் பெரியதாக இருப்பதாகவும் கூறினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)