யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில்கோவிட் தொற்று அப்டேற் ( 31.10.2021)

வவுனியாவில் கொரோனாப் பரவல் தொடர்ந்தும் அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில் மேலும் 31 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் உயிரிழந்த வயோதிபர் (முத்துமணியன் கறுப்பையா - வயது 90) ஒருவருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதேவேளை மேலும் 16 பேருக்கும் நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை,

இன்று யாழ்.பரிசோதனைக் கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேர்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் 04 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்

ஆகியோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 08.09.2025

Varisu - வாரிசு - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 06.09.2025

Varisu - வாரிசு - 06.09.2025

Read More
Mahanadhi - மகாநதி - 05.09.2025

Mahanadhi - மகாநதி - 05.09.2025

Read More