யாழ். மாநகர முதல்வர் - கனடியத் தூதுவர் சந்திப்பு

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இமானுவல் ஆனல்ட்டை இலங்கைக்கான கனடியத் தூதுவர் எரிக்ஸ் வோல்ஸ் ஆகியோருக்கிடையில் இடையில் விசேட சந்திப்பு இன்று (13) இடம்பெற்றது.

இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட முதல்வர்;

“யாழ்ப்பாணம் மாநகரத்தின் செயற்பாடுகள், முன்னேற்றங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டதுன் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக மாநகரத்துக்கான பாதாள சாக்கடைத் திட்டம் ஒன்று முறையாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும், இது தொடர்பில் கனடா ரொறன்ரோ மாநகர

முதல்வருடன் ஏற்கனவே, 3 வருடங்களுக்கு முன்பு கதைத்திருந்த விடயம் தொடர்பாகவும், அதனை நாட்டில் ஏற்பட்ட கோவிட் 19 அசாதாரண நிலைமைகள் காரணமாக நடைமுறைப்படுத்த முடியாது போனதாகவும், அதனை மீள ஆராய்வதற்கான நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை கனடா டொரொன்டோ மாநகரத்தின் ஊடாக பெற்றுத்தருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கோரியதாகவும், இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தூதுவர் குறிப்பிட்டார் என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் ஏற்படுத்தப்படும் தடைகள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பிலும், மக்களின் நிலைமைகள் தொடர்பிலும் முதல்வர் தூதுவரிடம் கேட்டறிந்து கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

யாழ். மாநகர முதல்வர் - கனடியத் தூதுவர் சந்திப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)