யாழில் மூன்று முகாம்கள் நீரில் மூழ்கியுள்ளது.

முப்பது வருடங்களாக முகாமில் வாழும் மக்கள் வருடந்தோறும் பெய்துவரும் மழை காரணமாக வெள்ளத்துக்கும் நோய் நொடிகளுக்கும் உள்ளாகி வருவதுடன் தங்கள் உடமைகளையும் அழிவுக்குள்ளாக்கி வரும் நிலையில் இருந்து வருகின்றனர்.

இவர்களின் நிலையை பார்வையிட்டு இவர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய உதவிகளை வழங்கும் நோக்குடன் மன்னாரிலிருந்து 'மெசிடோ' நிறுவனம் இவர்களின் தகவலை நேரடியாக பெற்றுக் கொண்டுள்ளது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவப்பட்டும் தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படாத மக்கள் முப்பது வருடங்களாக தொடர்ந்து யாழ் பகுதியில் மூன்று முகாம்களில் வசித்து வருகின்றனர்.

யாழ் பலாலி பகுதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டுள்ள இவ் மக்கள் 1990ம் ஆண்டு முதல் யாழப்பாணத்தில் சின்னவளை முகாம் , பாலாவி முகாம் , நிலவன் முகாம் ஆகிய மூன்று முகாம்களில் 57 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் 30 வருடங்களாக இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இவர்கள் பலாலியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை அரசு இன்னும் தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றாத நிலையால் வருடந்தோறும் பெய்துவரும் கன மழையால் இவர்கள் வாழும் முகாம் வருடந்தோறும் வெள்ளத்தில் அமிழ்ந்து வருகின்றது.

இந்த நிலையில் கடந்த வாரம் யாழ் பகுதியில் பெய்த மழையால் இவ் மூன்று முகாம்களும் சுமார் மூன்று அடி நீருக்குள் அமிழ்ந்த நிலையில் இவர்கள் பொது மண்டபத்திலும் அயலவர்கள் வீடுகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.

.இடம்பெயர்ந்து பொது மண்டபத்தில் வாழும் மக்களுக்கு தற்பொழுது சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவர்களின் நிலையை நேரில் பார்வையிட்டு இவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை வழங்கும் நோக்குடன் மன்னாரிலிருந்து 'மெசிடோ' நிறுவன இணைப்பாளர் யடசன் பிகிராடோ தலைமையில் ஒரு குழு சனிக்கிழமை (12.11.2022) சென்று இவர்களின் விபரங்களையும் தேவைகளையும் திரட்டியுள்ளது

இவர்களுக்கான உதவிகள் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக இவ் வட்டாரத்திலிருந்து தெரிவிக்கப்படுகின்றது.

உணவு பஞ்சமான காலத்திலும் இவ் நிறுவனம் இவ் மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழில் மூன்று முகாம்கள் நீரில் மூழ்கியுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More