யானைப் பசிக்கு சோளப்பொரி

மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்று வருகின்றது. எரிவாயு சிலிண்டர் இன்மையால் பெரும் கஸ்டங்களுக்குள்ளான பொது மக்கள் சிலிண்டர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து சிலிண்டர் விற்பனை நிலையங்களில் பெருமளவில் திரண்டு வருவதுடன் பல மணிநேரம் நீண்ட கியூ வரிசைகளில் காத்திருந்தும் பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பவேண்டிய நிலையும் ஏற்பட்டு வருகின்றது.

இதனால் பல இடங்களிலும் எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையங்களை அண்மித்து மக்கள் வீதிகளை மறித்தும் பெரும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் குறைந்த அளவில் சிலிண்டர் வினியோகம் இடம்பெற்றதுடன் பெருந்தொகையான மக்கள் கிடைக்காது ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

நிந்தவூர் கடற்கரைப் பிரதேசத்தை அண்டிய பகுதியில் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படும் என்ற தகவல் அறிந்து சுமார் இரண்டாயிரம் பேர் வரை நேற்று பொது மக்கள் நீண்ட கியூ வரிசையில் அதிகாலை தொடக்கமே காத்திருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது.

எனினும் மிக சொற்பமான அளவு (சுமார் 250) சிலிண்டர்களே விநியோகஸ்தரால் அங்கு கொண்டுவரப்பட்டு வழங்கப்பட்டதால் பெருந்தொகையான மக்கள் தமக்கு கிடைக்காது ஏமாற்றமடைந்ததுடன் கொந்தழிப்பான நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

இதனால் குறித்த சிலிண்டர் விநியோக வாகனத்தை பொது மக்கள் தடுத்து வைப்பதற்கு முயற்சித்த போதிலும் பொலிசாரின் தலையீட்டினால் அது விடுவிக்கப்பட்டது.

தவிரவும் நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு தொடர்பிலும் அதனால் எந்தளவிற்கு மக்கள் அவலத்திற்குள்ளாகினர் என்பது தொடர்பிலும் எடுத்துக்காட்டான படம் ஒன்று இலங்கையில் சமூக வலைத்தளங்களிலும் முகநூல்களிலும் வைரலாகி வருவதையும் அவதானிக்க முடிகின்றது

குறிப்பாக வயது முதிர்ந்த ஒருவர் எரிவாயு சிலிண்டரை தோளில் சுமந்தவாறு பொல் ஊண்றிக் கொண்டு நடப்பதாக வெளியாகியுள்ள அந்தப்பரிதாபகரமான படம் இந்த செய்திக்குரிய படங்களுடன் இணைத்துத் தரப்படுகின்றது.

யானைப் பசிக்கு சோளப்பொரி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now





ENJOY YOUR HOLIDAY