யா/ அம்பன் அமெரிக்கன் மிசன் மாணவர் பாராளுமன்ற முதலாவது அமர்வு 2023

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

யா/ அம்பன் அமெரிக்கன் மிசன் மாணவர் பாராளுமன்ற முதலாவது அமர்வு 2023

வடமராட்சி கிழக்கு அம்பன் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் 2023 ம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்ற அமர்வு நேற்று (11) திங்கள் பிற்பகல் 1:00 மணியளவில் பாடசாலை அதிபரும், மாணவர் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான சோ. வாகீசன் தலைமையில் இடம் பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக குறித்த பாராளுமன்ற அமர்விற்க்கு வருகை பிரதம விருந்தினர் மற்றும் பிரதிநிதிகள் மாணவர் பாராளுமன்ற அரசங்குவரை அழைத்து செல்லப்பட்டு அங்கு மங்கல விளக்கேற்றலுடன் அமர்வுகள் ஆரம்பமானது.

மங்கல் விளக்கினை நிகழ்வின் பிரதம விருந்தினரான வடமராட்சி கல்வி வலயத்தின் சமூக விஞ்ஞான ஆசிரிய ஆலோசகருமான பாலசந்திர மூர்த்தி, பாடசாலை அதிபரும், மாணவர் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான சோ. வாகீசன், பாடசாலை உப அதிபர் திருமதி பாணுமதி, விடயத்திற்க்கு பொறுப்பான ஆசிரியர் திரு. ரகுவரன், மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் சி. சாரமுதன் ஆகியோர் ஏற்றிவைத்தைத் தொடர்ந்து மாணவர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தலமையில் சபாநாயகர் தெரிவு இடம் பெற்றது.

பாராளுமன்ற சபாநாயகராக செல்வி எழிலரசி காண்டீபன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சபாநாகர் சத்தியப்பிரமாணம் இடம் பெற்றது.
அதனை தொடர்ந்து 10 அமைச்சர்களுக்கான நியமன கடிதங்கள் சபாநாயகரால் வழங்கி வைக்கப்பட்டு பிரதமரின் உறுதி உரை இடம் பெற்றது.

தொடர்ந்து 10 அமைச்சர்களும் தமது பிரேரணைகள் முன்வைத்ததுடன் இன்றைய சபை அமர்வு நிறைவுற்றது.

இதில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கலந்து கொண்டனர்.

யா/ அம்பன் அமெரிக்கன் மிசன் மாணவர் பாராளுமன்ற முதலாவது அமர்வு 2023

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)