மே தினம் கிளிநொச்சி  கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்றது

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சமத்துவக் கட்சியின் ஏற்பாட்டில் சமத்துவ மே தினம் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 2 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.

தாரளவாதம், இன ஒடுக்குமுறை, இராணுவ மயவாக்கம், அந்நிய ஆதிக்கம், மக்கள் விரோத போக்கு, சர்வதிகாரம், எல்லாவற்றுக்கும் எதிராக போராடுவோம். இது மக்களின் காலம் என்ற பிரதான கோசத்துடன் சமத்துவக் கட்சியின் மே தினம் நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப. உதயராசா பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், கடற்றொழிலாளர்கள் அமைப்பு, விவசாய அமைப்பு, கல்விச் சமூகம், உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

இங்கு உரையாற்றிய சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார், வரலாறு சந்தித்திராத பொருளாதார நெருக்கடியை நாட்டு மக்களின் மீது ஆளும் வர்க்கம் சுமத்தியுள்ளது. இதனால் தங்கள் அளப்பரிய பங்களிப்பை நாட்டுக்காகச் செலுத்துகின்ற போதும் உழைக்கும் மக்கள் அநியாயமாகத் தண்டிக்கப்படுகிறார்கள். உணவுக்கே வழியற்ற ஆபத்தான நிலையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்குப் பொருத்தமான, நிலையான தீர்வைக் காண்பதற்கு நீண்டகால வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் இதுவரை பெரிதாக முயற்சிக்கவில்லை. எனவே, புதிய மாற்றமொன்றைக் கோரும் வகையில் மாற்றத்துக்கான சமத்துவ மேதின நிகழ்வை நடத்துகின்றோம் எனக் குறிப்பிட்டார்.

மே தினம் கிளிநொச்சி  கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்றது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More