
posted 22nd March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
முஸ்லிம்களே எதிரிகள் கிழக்கு மாகாணத்தில்
கிழக்கு மாகாணத்தில் எமது பிரதான எதிரி சிங்களவர்கள் அல்ல, முஸ்லிம்களே என்று கூறியுள்ளார் இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன்.
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச சபையில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பின்னணி கொண்ட ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் சின்னத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடும் விவகாரம் தொடர்பாக தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கருத்துரைத்தபோது அவர் மேற்கண்டவாறு காட்டமாகக் கூறினார். மேலும், கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதில் சிங்கள மக்களைவிட முஸ்லிம் மக்களும் அரசியல்வாதிகளுமே தீவிரமாக செயல்படுகின்றனர்.
வேலை வாய்ப்பில் தமிழ் மக்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகினறன. தமிழ் மக்களின் பூர்வீக நிலமான கல்முனையில் தமிழ் பிரதேச செயலகம் உருவாக விடாமல் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை தமிழ் அரசு கட்சி முல்லைத்தீவு - கரைதுறைப்பற்றில் முஸ்லிம் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இதை நாம் வன்மையாக எதிர்க்கிறோம். முல்லைத்தீவில் உள்ளவர்களுக்கு அது புரியாமல் இருக்கலாம். ஆனால், அம்பாறையை பொறுத்தவரை தமிழ் மக்களுக்கு எதிரிகள் சிங்களவர்கள் அல்ல, முஸ்லிம்களே என்றும் அவர் கூறினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)